தேனியில் மிஸ் பண்ணக்கூடாத சின்ன சுருளி அருவி... இந்த சம்மருக்கு ஒரு விசிட் அடிக்கலாமா.?
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கோம்பைத்தொழு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைஅடிவாரத்தில் இயற்கை எழிலோடு அமைந்துள்ளது சின்னசுருளி அருவி
இயற்கை எழில் கொஞ்சும் வகையில் காணப்படும் இந்த சின்னசுருளி அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமாக சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்
தேனி மாவட்டதில் உள்ள சின்ன சுருளி அருவியானது, கடமலைக்குண்டு கிராமத்தில் இருந்து 15கி.மீ தொலைவில் இயற்கை எழிலோடு அமைந்துள்ளது
தேனியில் இருந்து இந்த சின்ன சுருளி அருவிக்கு செல்ல வேண்டும் என்றால், கடமலைக்குண்டு வழியாக செல்லலாம். தேனியிலிருந்து கடமலைக்குண்டுக்கு பேருந்து வசதி இருக்கிறது. அங்கிருந்து மினி பஸ், ஆட்டோ மூலம் சின்ன சுருளி அருவிக்கு செல்லலாம்
மதுரையில் இருந்து பொதுப் போக்குவரத்தில் செல்ல நினைப்பவர்கள் ஆண்டிபட்டி சென்று அங்கிருந்து கடமலைக்குண்டு வழியாக செல்லலாம்
இந்த சின்ன சுருளி அருவி இருக்கும் இடம், மேகமலை வன உயிரின சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதி. எனவே அருவி வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இங்கே காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அருவிக்குச் சென்று குளிக்க அனுமதி வழங்கப்படுகிறது
மழைப்பொழிவு நேரங்களில் சின்ன சுருளி அருவியில் அதிக அளவிலான நீர்வரத்து இருக்கும். இந்த அருவியில் குளித்து மகிழ்வதற்காகவே பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்
அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை பெய்யாத நிலையில், அருவியில் லேசான நீர்வரத்து தான் இருந்து வந்தது. தற்போது மேலும் மழைப்பொழிவு இல்லாததால் சின்ன சுருளி அருவியில் நீர்வரத்து முற்றிலும் குறைந்து காணப்படுகிறது
சின்ன சுருளி அருவியில் நீர்வரத்து முற்றிலும் குறைந்துள்ளதால் தற்போது அருவி பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்