குறைந்த செலவில் குதூகலிக்க குளுகுளு ஸ்பாட்.. தேனி மேகமலை ஸ்பெஷல்.!

தேனி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்த சுற்றுலாத்தலமாக இருப்பது சின்னமனூர் அருகே உள்ள மேகமலை

கொடைக்கானல், ஊட்டி போன்றே குறைந்த செலவில் குளுமையான மலை பகுதிகளுக்கு சுற்றுலாவிற்கு செல்ல விரும்பும் நபர்களுக்கு வரப்பிரசதமாக இருக்கக்கூடிய இடம் தான் மேகமலை

உயர்ந்து நிற்கும் மலைச்சிகரங்களுக்கு நடுவில் உள்ள பெரும் பள்ளத்தாக்குப் பகுதியே மேகமலை. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது இந்த பள்ளத்தாக்கு

அக்காலத்தில் ஆங்கிலேயர்கள் தேயிலைத் தோட்டங்கள் அமைக்க மேகமலையைத் தேர்ந்தெடுத்தனர். 

மேகமலை பகுதிகளில் முழுக்க முழுக்க காப்பி தேயிலை போன்றவைகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது

மேக மலை கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் உள்ளதால், கண்களை கவரும் தேயிலைத் தோட்டங்களும், இங்கு எப்போதும் குளுமையான சூழலும் இருக்கும். 

மேகங்கள் சூழ மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மேகமலை பகுதியில் அதிகமான வெயிலும் அதிகமான குளிரும் இருக்காது 

எப்பொழுதும் இதமான சூழலை காணப்படும். மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக பயிரிடப்பட்டு உள்ள தேயிலை தோட்டங்கள் தான் இங்கு ஸ்பெஷல்

பார்ப்பதற்கு ரம்யாக காட்சி தரும் தேயிலை தோட்டங்களை பார்ப்பதற்காகவே தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்

இங்கு வந்தால் தேயிலை தோட்டங்களை ரசிப்பதோடு மட்டுமல்லாமல் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வியல் முறைகளையும் ரசிக்க முடியும்.

மேகமலையில் இருக்கும் தனியார் தேயிலை தொழிற்சாலைகளில் எப்படி தேயிலையில் இருந்து டீத்தூளை தயாரிக்கிறார்கள் என்பதனை விளக்கி கூறுவதும் அழகுதான்

மேகமலை புலிகள் சரணாலயத்துக்குட்பட்ட பகுதி என்பதால் இங்கு கட்டுப்பாடுகளும் அதிகம். காலை ஆறு மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே மேகமலை பகுதிக்கு செல்ல முடியும்

அங்குள்ள ரிசார்ட்களில் தங்க வேண்டும் என்றால் முன்பதிவு செய்து கொள்வதும் அவசியம்.

கன்னியாகுமரியில் பிரமிப்பூட்டும் மாத்தூர் தொட்டிப்பாலம்.!