தேனியில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி... பாரம்பரிய உடையில் சிலம்பம் சுற்றி அசத்திய சிறுமிகள்.!

தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள தனியார் பள்ளியில் உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் மற்றும் வீரமங்கை வேலுநாச்சியார் சிலம்பக்கலைக் கூடம் சார்பில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது

இதில், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 900க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்கள் என பல குழுவினராக இந்த போட்டியில் பங்கு பெற்றனர்

இப்போட்டியில் 5 வயது முதல் 18 வயதினற்குட்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்று சுருள்வால், வேல் ஒற்றைக்கம்பு,

இரட்டைக் கம்பு சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளாக வயதிற்கு ஏற்ப பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றது

இதில் சிறப்பாக சிலம்பம் சுற்றி போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், குழுவினருக்கும் பரிசு கோப்பையுடன் பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது

'V' என்ற எழுத்தில் பெயர் தொடங்குகிறதா..?

காணாமல் போன ஸ்மார்ட் போனை கண்டுபிடிப்பது எப்படி.?

1700 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை  கண்டுபிடிப்பு...

More Stories.