திருவாரூர் என்றாலே அனைவரின் ஞாபகத்திற்கும் வருவது ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான அருள்மிகு தியாகராஜ சுவாமி ஆலய ஆழித்தேர் தான்
இந்த ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் தேதி ஆழித்தேரோட்டமானது வெகு சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இவ்வாலயத்தின் மற்றும் ஒரு சிறப்பான நிகழ்வு ஆலயத்தின் தெப்பத் திருவிழாவாகும்
400-க்கும் மேற்பட்ட காலி பெரல்களைக் கொண்டு தெப்பம் கட்டும் பணியாளர்களால் ஒரு மாதகாலமாக பிரம்மாண்டமாக கோவிலின் வடிவத்தில் ஆன வண்ண விளக்குகளில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தினை கமலாலயர் திருக்குளத்தில் கட்டினர்
மிக பிரம்மாண்டமாக அமையப்பெற்ற இத்தெப்பத்தில் பார்வதி தேவியுடன் கல்யாண சுந்தரர் எழுந்தருளச் செய்யப்பட்டு தெப்பத் திருவிழாவானது வெகு விமர்சையாக நடைபெற்றது
500க்கும் மேற்பட்டோர் அமர்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்ட தெப்பமானது கமலாலய திருக்குளத்தில் தினந்தோறும் மூன்று முறை சுற்றி வரும்
இந்த தெப்பத் திருவிழா மூன்று நாட்கள் இரவு நேரத்தில் தொடங்கி விடிய, விடிய நடைபெறும். தெப்பத்தில் இசைக் கச்சேரிகளும், கீர்த்தனைகளும் நடைபெறும்
வேறு எங்கும் இல்லாத வகையில் தெப்பத்தில் பக்தர்களையும், பொது மக்களையும் ஏற்றி திருக்குளத்தை வளம் வருவது இங்கு மட்டும் நடைபெறுவது சிறப்பு வாய்ந்ததாகும்
இத்தெப்பத்தை காணவும் தெப்பத்தில் வலம் வரவும் திருவாரூர் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்
நீண்ட ஆயுளைப் பெற அமிர்தகடேஸ்வரரை வழிபடுங்கள்… ஆயுள் பெருகும்.!