ரத்த தானம் செய்வதால் இவ்வளவு நன்மைகளா.?
தென்காசி ரோஸ் மஹாலில் வைத்து ரோட்டரி கிளப் சார்பில் இரத்தக்கடையாளர்களை கௌரவிக்கும் விதமாக விருதுகள் வழங்கப்பட்டது
தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அதிக அளவு ரத்த தான முகாம் மற்றும் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்ட வருகிறது
சராசரியாக ஒரு மனிதனின் எடையில் இரத்தம் தோராயமாக 7-8% ஆகும். ஒரு உடலில் சுமார் 5 லிட்டர் - 6 லிட்டர் இரத்தம் சுழல்கிறது
இந்த அமிர்தம் மனித உடலில் ஊட்டச்சத்துக்கள், ஹார்மோன்கள், ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்சைடு மற்றும் பிற கழிவுப்பொருட்களின் போக்குவரத்து உட்பட பலவிதமான செயல்பாடுகளைச் செய்கிறது
இந்தியாவில் ஒரு கணக்கெடுப்பின்படி, ஒவ்வொரு இரண்டு வினாடிகளுக்கும் இரத்தமாற்றம் தேவை என்று தரவுகள் சொல்லப்படுகிறது
மேலும் சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 38,000 ரத்தக் கொடையாளர்கள் தேவைப்படுகின்றனர் என்று தரவுகள் சொல்லப்படுகிறது
இதனை முன்னிட்டு தென்காசியில் ரத்தக் கொடையாளர்களுக்கு கவுரவிக்கும் விதமாக விருதுகள் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்