தாமிரபரணியில் 13-க்கும் மேற்பட்ட நாட்டு இன மீன்கள் உள்ளன.!
வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான பொதிகை மலையில் உற்பத்தி ஆகிறது
அடர்ந்த காடுகளுக்கு நடுவே மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி நதி சுமார் 15 கி.மீ தூரம் வனப்பகுதியை கடந்து காரையாறு, மணிமுத்தாறு, சேர்வலாறு ஆகிய அணைகளை தழுவி நெல்லை மாநகருக்குள் பாய்ந்து ஓடுகிறது
நெல்லை வழியாக தூத்துக்குடி மாவட்டத்தை கடந்து புன்னை காயல் பகுதியில் மன்னார் வளைகுடா கடலில் கலக்கிறது
ஆண்டு முழுவதும் வற்றாத பொருநை நதி என்று அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு பல்வேறு வரலாற்று பாரம்பரியங்களை கொண்டுள்ளது
அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தாமிரபரணி ஆற்றில் பல்வேறு மீன் இனங்கள் காணப்படுகின்றன
மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள்சாா் இயற்கைவள காப்பு மையம் சார்பில் வெளிச்சி மீன், நாட்டுக்கெண்டை உள்ளிட்ட 13 நாட்டு இன மீன்கள் தாமிரபரணி ஆற்றில் இருப்பது தெரியவந்துள்ளது
இதில் ஆபத்தானதான டேங்க் கிளீனர் மீனும் இருப்பது தெரியவந்துள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது
இது குறித்து மீனவர்கள் கூறுகையில், “நாட்டு மீன்களுக்கு வலை விரிச்சா, எதுக்கும் உதவாத தென் அமெரிக்க வளர்ப்பு மீன்கள் வந்து விரிச்சு வலையில் சிக்குகின்றன
வலையில் சிக்கி, தப்பிக்க வலைய கடிச்சு சேதப்படுத்தவும் செய்கின்றன. சிக்குனதை கரையில் வீசி செல்கிறோம் என்றனர்
நாங்களாவது கரையில் வலை விரிக்கிறோம். உள்ளே சென்று மீன்பிடிப்போருக்கு ஒரு நாளைக்கு 5 கிலோ முதல் 10 கிலோ வரை இந்த வகை வளர்ப்பு மீன்கள் சிக்குகின்றன
ஒவ்வொரு மீனும் அரை கிலோ முதல் ஒன்றரை கிலோ வரை எடை உள்ளது. இந்த மீன்கள் ஒன்று அணையில் இருந்து வந்திருக்க வாய்ப்புள்ளது. அல்லது யாராவது விட்டிருக்கலாம் ’’ என்றார்