சிறியவர் முதல் பெரியவர்வரை பெரும்பாலானவர்களுக்கு மிகவும் பிடிக்கும் தயிரில் நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துகள் உள்ளது
இதில் கால்சியம், வைட்டமின் பி2, வைட்டமின் பி12, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இது எளிதில் செரிக்கக்கூடிய உணவும்கூட
சாதத்துடன் தயிர் சேர்த்து சாப்பிட்டால் ஆரோக்கியமான உணவாக கிடைக்கும். மேலும் உடலை நீரேற்றமாக வைத்திருக்க சாப்பாட்டுடன் ஒரு கிளாஸ் மோர் அருந்தலாம்
ஆனால் சில உணவுகளுடன் தயிரை சேர்த்து சாப்பிடக்கூடாது என பலருக்கும் தெரியாது. அப்படி சேர்த்து சாப்பிடும்போது பலவித உடல் பிரச்னைகள் வரும் வாய்ப்புகள் அதிகம்
எனவே தயிருடன் சேர்த்து சாப்பிடக்கூடாத 6 உணவுகள் அடுத்தடுத்த ஸ்லைடுகளில்...
வெப்பத் தன்மை கொண்ட மாம்பழத்தை தயிர் போன்ற குளிர்ச்சியான உணவுடன் இணைத்து சாப்பிட்டால் அது உங்கள் செரிமானத்தைத் தொந்தரவு செய்யும்
1
தயிர் சாப்பிட்ட உடனேயே தேநீர் அருந்துவதைத் தவிர்க்கவும். ஏனென்றால் அது வயிற்றைக் கலக்க வாய்ப்புள்ளது
2
எண்ணெயில் வறுத்த உணவுப் பொருட்களுடன் தயிர் சாப்பிடுவது செரிமான செயல்முறையை மெதுவாக்கும்
3
பொதுவாக இந்தியாவில் ரைத்தாவில் வெங்காயம் தயிர் சேர்த்து உண்ணப்படுகிறது. வெங்காயம் மற்றும் தயிர் குளிர்ச்சியின் மாறுபட்ட தன்மை காரணமாக இந்த கலவை அனுமதிக்கப்படுவதில்லை
4
சாதாரண பாலை ஒருபோதும் தயிருடன் இணைக்க வேண்டாம். ஏனெனில் இது கடுமையான வீக்கத்திற்கு வழிவகுக்கும்
5
புரதம் நிறைந்த மீனை தயிருடன் சேர்க்கக்கூடாது. ஏனெனில் இது செரிமானத்திற்கு கடினமாக இருக்கும்
6
வைட்டமின் B12 இன் ஆதாரமான 9 பழங்கள் மற்றும் காய்கறிகள்.!