திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணித் திருவிழா தேரோட்டம்... திரளான பக்தர்கள் தரிசனம்.!

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்திருக்கும் சுப்பிரமணிய சுவாமி கோவில் உலகப் புகழ்பெற்றது

முருகனின் அறுபடை வீடுகளில் 5 குன்றின் மீது இருக்க, திருச்செந்தூர் மட்டும் கடலோரம் அமைந்திருக்கும்

மற்ற அறுபடை தலங்களில் எல்லாம் முருகனை மலையேறி தரிசித்து விட்டு கீழே இறங்கி வருவார்கள், ஆனால் திருச்செந்தூரில் மட்டும் மக்கள் கடல் மட்டத்திற்குக் கீழிறங்கி முருகனை தரிசித்து பின்னர் மேலே ஏறிச் செல்வார்கள்

இதனால் திருச்செந்தூர் பக்தர்கள் வாழ்வில் திருப்பம் தரும் தலம் என்னும் சிறப்பைப் பெற்றது

இதனால் திருச்செந்தூர் முருகனை தரிசிக்கத் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள்

இத்தலத்தில் நடைபெறும் தைப்பூசம், வைகாசி விசாகம், மாசித் திருவிழா ஆவணித் திருவிழா போன்ற நிகழ்வுகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது

அந்தவகையில் இந்த ஆண்டு ஆவணித் திருவிழா ஆகஸ்ட் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது

12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் சிகர நிகழ்வான 10ஆம் நாள் திருவிழாவாக இன்று காலை 6:30 மணிக்கு மேல் சிம்ம லக்னத்தில் திருத்தேரோட்டம் நடைபெற்றது

பிள்ளையார் தேர், முருகன் தேர், அம்மன் தேர் வீதிகளில் ஆடி வந்தது. இந்த தேரோட்ட நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்

முன்னதாக சுவாமிக்குச் சிறப்புப் பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றது

next

உணவுக்குப் பிறகு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் 9 வழிகள்.!