ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே ராதாப்புலி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ தடியார் உடையவர் அய்யனார் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதில் இருந்து ஆண்டுதோறும் வருடாபிஷேகத்தின் போது திருவிளக்கு பூஜைகள் செய்து சுவாமி - அம்பாள் ஊஞ்சல் உற்சவம் வழக்கமான நடைபெற்று வருகிறது
இந்நிலையில், 16-ம் ஆண்டு வருடாபிஷேக விழாவை முன்னிட்டு திருவிழக்கு பூஜையானது நடைபெற்றது
திருவிளக்கு பூஜையில் பண்டிதர்கள் வேதமந்திரங்கள் முழங்க 501 பெண்கள் விளக்குகள் வைத்து பூஜைகள் செய்து வழிபட்டனர்
பின்பு பெண்கள் பூஜை செய்த விளக்கினை தலையில் சுமந்து முக்கிய பகுதிகள் வழியாக கோவிலைச் சுற்றி ஊர்வலமாக சென்று வழிபட்டனர். இறுதியாக சுவாமி - அம்பாளுக்கு ஊஞ்சல் உற்சவமானது நடைபெற்றது
இதில் ராதாப்புலி கிராமம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து வேண்டுதல்கள் வேண்டி அதனை நிறைவேற்ற ஊஞ்சலை அசைத்து வழிபட்டு சுவாமியை வணங்கி சென்றனர்