தமிழ்நாட்டின் ட்ரெண்டிங் புடைவையான "நிவி" புடவையை இப்படியும் கட்டலாமா.?

பல்வேறு விதமான புடவைகளை விதவிதமாய் கட்டினாலும் “நிவி” புடவைக்கு தனி மவுசு உள்ளது என்று தான் சொல்லலாம்

முதன் முதலாக ஆந்திர பிரதேசத்தில் இருந்து உருவான இந்த கலாச்சாரம் தற்பொழுது இந்தியா முழுவதும் பரவி பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மற்றும் நவீன புடவையாக திகழ்கின்றது

குறிப்பாக தமிழ்நாட்டில் கலாச்சாரத்தில் ஒரு அங்கமாகவே இந்த நிவி புடவை கால் பதித்து விட்டது. இந்த “நிவி” புடவை கட்டுவது எப்படி என தெரிந்துகொள்ள திரையை தட்டவும்..

முதலில் புடவையின் நுனிப்பகுதியில் சிறிய முடிச்சு ஒன்றை போட்டுக்கொண்டு அதனை இடுப்பில் சொருகி கொண்டு இடுப்பு பகுதியில் சுற்றிக்கொள்ள வேண்டும்.

முன் பகுதியில் பிளீட் வைப்பதற்காக சிறியதளவு புடவையை மட்டும் ஒதுக்கிக்கொண்டு மீண்டும் இடுப்பின் முன் பகுதியில் புடவையை சொருகிக் கொள்ள வேண்டும்.

இடுப்பில் சொருகிக்கொண்ட மறுபகுதியை மீண்டும் சுற்றி குட்டி குட்டியான பிளீட்களை வைத்து தோள்பட்டையின் மேல் போட்டு மடிப்பு கலையாத படி புடவை ஊசி ஒன்றை குத்திக் கொள்ள வேண்டும்

தற்பொழுது வலப்புறத்தில் உள்ள இடுப்புப் பகுதியில் சிறிது சிறிதான மடிப்புகளை வைத்து இடுப்பின் முன் பகுதியில் அதாவது ப்ளீட்டை சொருகும் பகுதியில் புடவை ஊசியை பயன்படுத்தி குத்திக் கொள்ள வேண்டும்

Stories

More

கம்மி விலையில் ஸ்வெட்டர் வேணுமா..? விழுப்புரம் இந்த பகுதிக்கு போங்க...!

முத்தத்தில் உருவான கமல் ஓவியம்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு செல்ல இதுதான் நல்ல டைம்..

இப்படி செய்வதன் மூலம் இடுப்பின் வழியாக சுற்றும் மடிப்புகள் மூலமாக அழகான வளைவு ஒன்று கிடைக்கும். அதேபோல் முதலில் பிளீட் வைப்பதற்காக சிறிதளவு புடவையை ஒதுக்கியிருப்போம் அதனை தற்பொழுது எடுத்து குட்டி குட்டியான பிளீட் வைத்து இடுப்பில் சொருகிக் கொள்ள வேண்டும்

இடுப்பு பகுதியில் இருந்து கால் பகுதி வரைக்கும் வைக்கப்பட்டுள்ள மடிப்புகளை கைகள் கொண்டு அல்லது நவீன முறையில் ஸ்ட்ரைட்னர் கொண்டு நேர்த்தியாக இழுத்து விட்டால் மடிப்புகள் கலையாதபடி நிற்கும்

நிவி புடவையில் இது ஒரு வகையாக இருக்கக்கூடிய நிலையில் இதே போல் சேலையின் பின்புறத்தில் தொங்கவிடப்பட்டுள்ள முந்தானையை மடிப்புகள் இல்லாத வகையில் ஒரே மடிப்பாக தோள்பட்டையில் போட்டுக் கொள்வதும் ஒரு வகையான நிவி புடவை

தமிழ்நாட்டில் தமிழகப் பெண்களால் அதிகமாக கட்டப்படும் நிவி புடவையாக இந்த இரண்டு வகையான புடவைகள் திகழ்கின்றது.

விருதுநகரில் ஐஸ்கிரீம் தோசை எங்கே கிடைக்கும் தெரியுமா.?