கும்பக்கரை அருவியில் குளிக்க ரெடியா... இப்ப தான் அங்க குளிக்க சரியான நேரம்.!

தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுருளி, கும்பக்கரை உள்ளிட்ட அருவிகள் முக்கியமானதாகும்

அதில் கும்பக்கரை அருவியின் நீர்வீழ்ச்சி நீர் கொடைக்கானல் மலையில் உருவாகி இரண்டு இயற்கை நிலைகளில் பாறைகளின் கீழே பாய்கிறது

இந்த அழகான நீர்வீழ்ச்சியில் எப்போதுமே நீர்வரத்து இருந்துக் கொண்டே இருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும்

அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளதாலும், அருவிக்கு வரும் தண்ணீர் மலையிலிருந்து பல்வேறு மூலிகை செடிகள், மரங்கள் மீது பட்டு வருகிறது

இதனால், அருவி தண்ணீரானது தீராத நோய்களையும் தீர்க்கும் என்பது ஐதீகம். எனவே, ஆண்டு முழுதும் அதிக எண்ணிகையில் சுற்றுலாப் பயணியர் இங்கு குளிக்க வருகின்றனர்

பொதுவாக கோடையில் அருவியில் தண்ணீர் இருக்காது, வறண்டு போகும். இந்தாண்டு மார்ச் மாதத்தில் இருந்து அருவிக்கு தண்ணீர் வரத்து பெரிதளவில் இல்லை

இந்த நிலையில் இந்த ஆண்டு பெய்த கோடை மழை காரணமாக தேனி மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டதை அடுத்து கும்பக்கரை ஏரிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் கனமழைக்கான மஞ்சள் அலட் எச்சரிக்கை முடிவடைந்துள்ளது. கும்பக்கரை அருவியில் நீர்வீழ்ச்சி சீரானதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்

பெரியகுளம் தேவானப்பட்டி வனச்சரகர் டேவிட் ராஜன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

next

வாழைப்பூ சாப்பிடுவதால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்.!