ராமேஸ்வரத்திற்கு செல்வோருக்கு எச்சரிக்கை... இரண்டு நாட்கள் கட்டுப்பாடு விதிப்பு.!

Scribbled Underline

ராமேஸ்வரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தருவதை யொட்டி பாதுகாப்பு நலன்கருதி இரண்டு நாட்கள் போக்குவரத்து வழித்தடம் மாற்றம், ராமநாதசுவாமி கோவில், தனுஷ்கோடி செல்ல பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்துள்ளது மாவட்ட நிர்வாகம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆன்மீக பயணமா சனிக்கிழமை (ஜன 20) மற்றும் ஞாயிறுக்கிழமை (ஜன 21) ஆகிய இரண்டு நாட்கள் ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்தும் தனுஷ்கோடி செல்லவும் உள்ளார்

இதனால் பாதுகாப்பு நலன் கருதி மாவட்ட நிர்வாகம் சார்பில் போக்குவரத்து மாற்றம் மற்றும் முக்கிய இடங்களில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது

சனிக்கிழமை (ஜன 20) அன்று நண்பகல் 12:00 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரத்திற்கு போக்குவரத்து தடைசெய்யப்பட்டு ராமேஸ்வரம் நகர் பகுதியிலும் இதே நேரத்தில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது

ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 21) அன்று ராமேஸ்வரம் நகரில் காலை 6:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கும் கனரக வாகனங்கள் ராமேஸ்வரம் நகர் பகுதிக்குள் சென்று வர தடைவிதிக்கப்பட்டுள்ளது

தனுஷ்கோடி சுற்றுலா தளத்திற்கு போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம்: சனிக்கிழமை ( ஜனவரி 20) நன்பகல் 12:00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 21) நன்பகல் 12:00 வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது

ராமநாதசுவாமி திருக்கோவில் சாமி தரிசனம் மாற்றம்: சனிக்கிழமை (ஜனவரி 20) அன்று காலை 08:00 மணி முதல் மாலை 06:00 மணி வரை பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி இல்லை

இந்த தீவுக்கு வந்தால் வீடு, நிலம் இலவசம்...

ஜிம்மில் கெத்து காட்டிய 80 வயது பெண்மணி...

மனிதனின் எலும்பையே முறிச்சிடும்.. அபாயகரமான நாய்

More Stories.

பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதை தவிர்க்க கொள்ள வேண்டும். பாதுகாப்பு நலன் கருதி ராமேஸ்வரம் நகர்ப்பகுதி முழுவதும் இரண்டு நாட்களுக்கு டிரோன் கேமரா பயன்படுத்துவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது

இந்நிலையில், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்  8 எளிய பயிற்சிகள்.!