புதுச்சேரி, கதிர்காமம் பகுதியில் மிகவும் பிரசித்திபெற்ற அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயம் உள்ளது
இவ்வாலயத்தின் செடல் உற்சவ திருவிழா கடந்த 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது
உற்சவ திருவிழா துவங்கியதில் இருந்து நாள்தோறும் இரவு நேரத்தில் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலாவும் நடைபெற்று வருகிறது
இந்நிலையில் உற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடல் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது
மூலவர் அருள்மிகு முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
இதில் புதுச்சேரி முதல்வர், அமைச்சர்கள்உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்
மேலும் முதல்வர், அமைச்சர்கள் உடலில் செடல் குத்தியும் பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர்