பட்டாசு எப்போது வாங்கலாம்.? கம்மியான விலையில் வாங்க இந்த ட்ரிக் யூஸ் பண்ணுங்க.!

இந்தியாவின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி என்றாலே அங்கு பட்டாசு இல்லாமல் இருக்காது

இந்தியாவின் 90 சதவிகித பட்டாசுகள் விருதுநகர் மாவட்டத்தில் தான் தயார் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நமக்கு மகிழ்ச்சி தரும் பட்டாசுகள் விலையேற்றத்தை சந்தித்து வருகிறது

தொழிற்சாலைகளுக்கான கட்டுப்பாடு, மழைப்பொழிவு, உற்பத்தி குறைவு போன்ற காரணங்களால் இந்த ஆண்டும் பட்டாசு விலையேற்றத்தை சந்தித்துள்ளது

இந்தாண்டு உற்பத்தி குறைவு என்பதால் கடந்த ஆண்டை விட பட்டாசு விலை 20 முதல் 25 சதவிகிதம் வரை பட்டாசுகள் விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. தீபாவளி நெருங்க நெருங்க இந்த விலை இன்னும் அதிகம் ஆகலாம் என்று கூறப்படுகிறது

இந்த ஆண்டு ஏற்கனவே உற்பத்தி குறைவு என கூறப்படும் நிலையில், தீபாவளி சமயத்தில் அடைமழை இருக்கும் பட்சத்தில் பட்டாசு தொழிற்சாலைகள் பட்டாசுகளை உற்பத்தி செய்ய முடியாமல் போகலாம்

அந்த சுழலில் பட்டாசுகள் கையிருப்பு குறைவாக இருக்கும் ஆனால் தேவை அதிகரிக்கும். இதனாலேயே தீபாவளி நெருக்கத்தில் பட்டாசுகள் கடுமையான விலையேற்றத்தை சந்தித்து வருகிறது

பொதுவாக இந்த விலையேற்றத்தை தவிர்க்க தீபாவளி வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே திட்டமிட்டு பட்டாசுகளை வாங்குவது நல்லது

இப்படி வாங்கும் பட்சத்தில் கடைசி நேர பதற்றம், போக்குவரத்து நெரிசல் போன்றவற்றையும் தவிர்த்து விரும்பிய பட்டாசுகளை தேர்ந்தெடுத்து வாங்கலாம். இது சிவகாசிக்கு நேரில் சென்று வாங்குவது, ஆன்லைன் ஆர்டர் செய்வது என இரண்டுக்குமே பொருந்தும்

ஆன்லைன் ஆர்டர் செய்வதில் ஏன் முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்றால், தீபாவளி நெருக்கத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் போது அப்போது இருக்கும் நெரிசலில் பட்டாசுகள் சரியான நேரத்திற்கு நம்மை வந்து சேர முடியாமல் போகலாம்

அது மட்டும் இல்லாமல் எப்போதும் பட்டாசு விற்பனையாளர்கள் தீபாவளிக்கு பத்து நாட்களுக்கு முன்னரே இது போன்ற ஆன்லைன் டெலிவடிகளை நிறுத்தி விடுவார்கள். எனவே முன்னதாகவே திட்டமிடுதல் இங்கு அவசியமாகின்றது

next

உலகில் நீண்ட காலம் வாழும் மனிதர்களின் பொதுவான 7 பழக்கவழக்கங்கள்.!