புரதம் மற்றும் வைட்டமின்கள் அதிகமுள்ள முட்டையின் வெள்ளைக் கரு, சருமத்தை சுத்தம் செய்வதுடன் இறுக்கப்படுத்தும். முட்டையின் வெள்ளைக் கருவை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். வாரம் இருமுறை இதனை செய்யலாம்.
இது முகத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும் மற்றும் முகப்பருக்கள் தடுக்கும். சருமத் துளைகளை திறந்து மிகுதியாக உள்ள எண்ணெயை நீக்கிவிடும். தேனை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும்.
சருமத்தை குளிர்விக்கும். சருமத் துளைகளைக் குறைத்து எண்ணெய் சுரப்பைக் குறைக்கிறது. கற்றாழை ஜெல்லை எடுத்து சிறிது நேரம் ஆறவிட்டு முகத்தில் தடவவும். 30 நிமிடங்கள் கழித்து கழுவவும்.
எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளதால் பாக்டீரியாவை எதிர்க்கும் .முகத்தில் எண்ணெய்யை தடுக்க எலுமிச்சை உதவுகிறது. எலுமிச்சை சாறை நீருடன் கலந்து, பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி 20-30 நிமிடங்கள் விட்டு கழுவி விடவும்.
இறந்த சரும அணுக்களை அகற்றி மிகுதியான எண்ணெயை இழுத்துக் கொள்கிறது. இரண்டாக வெட்டிய தக்காளியை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும்.
ஓட்ஸை தண்ணீருடன் கலந்து பேஸ்ட் போல செய்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும்.