நிறம் மாறிய வெள்ளை துணிகளை பளிச்சென மாற்ற உதவும் டிப்ஸ்.!

என்ன தான் வாஷிங் மெஷின் வைத்து துணிகளை சொகுசாக துவைத்தாலும், ஒரு சில துணிகளை நாம் கையில் தான் துவைக்க வேண்டிய கட்டாயம் இருக்கும்

குறிப்பாக, வெள்ளை துணிகள், காலங்களில் அதிக கறை உள்ள துணிகள், குழந்தைகளின் யூனிபார்ம் ஆகியவற்றை பளீரென மாத்த கை வலிக்க ஊறவைத்து துவைப்போம்

என்னதான் பளீரென துணிகளை துவைத்தாலும், காலம் செல்ல செல்ல வெள்ளை துணிகள் பழுப்பு நிறத்தில் மாறிவிடும்

ஆனால் வெறும் ஒரு பொருளை வைத்து பழுப்பு நிற வெள்ளை சட்டையை எப்படி பளீரென மாற்றுவது என தெரிந்துகொள்ள திரையை தட்டவும்...

பழுப்பு நிறத்தில் மாறிய வெள்ளை சட்டையை பளீரென மாற்ற முதலில், ஒரு பக்கெட்டில் துணியை ஊறவைக்கும் அளவுக்கு வெது வெதுப்பான தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள்

1

அந்த தண்ணீரில் சோப்பு பவுடர் அல்லது லிக்விட் சேர்த்து அதனுடன் நாம் பல் துலக்க பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டை ஒரு ஸ்பூன் அளவிற்கு சேர்த்து நன்றாக கலக்கவும்

2

More Stories.

வீட்டில் இருக்கும் வெள்ளி பொருட்கள் கருத்து விட்டதா.?

உங்கள் வீட்டில் பல்லி தொல்லை இருக்கிறதா.?

வீட்டில் மீன் தொட்டி வைப்பதால் இத்தனை நன்மைகளா.?

இப்போது நீங்கள் துவைக்க எடுத்து வைத்துள்ள வெள்ளை துணிகளை இந்த தண்ணீரில் பத்து முதல் 15 நிமிடம் வரை ஊற வைத்து துணி நன்றாக ஊறியதும் துணிகளை தனியே எடுத்து நன்கு பிழியவும்

3

பின்னர், அவற்றை வாஷிங் மிஷினில் போட்டு அதில் வாஷிங் பவுடர் மற்றும் சிறிது ஷாம்பூ சேர்த்து துவைத்து எடுத்தால் துணிகளில் இருக்கும் கறைகள் நீங்கி துணி பளிச் சென்று மாறிவிடும்

4

நாம் பயன்படுத்தும் பேஸ்ட் துணிகளில் உள்ள கறைகளை எளிமையாக நீக்கிவிடும். அதே போல, ஷாம்பு துணிகளில் இருக்கும் தன்மையை மாற்றாமல் அழுக்குகளை மட்டும் நீக்கி துணிகளை எப்போதும் புதிது போல வைத்திருக்கும்

இந்த முறையை கையில் துவைக்கும் போதும் பயன்படுத்தலாம். துணிகளை ஊறவைத்து எடுத்து லேசாக சோப்பு போட்டாலே போதும். வெள்ளை துணி பளீரென மாறிடும்

சர்க்கரை நோயாளிகளுக்கு முட்டை நல்லதா.?