நெல்லையின் சிறந்த பொழுதுபோக்கு இடமாக இருப்பது அறிவியல் மையம் தான். பொழுதுபோக்கு மட்டும் இல்லை, அறிவை வளர்த்து கொள்ளும் பல விஷயங்களும் இங்கு உண்டு
குழந்தைகளுக்கு பிடித்த விளையாட்டுகள், அறிவியல் நிகழ்வுகள், டைனோசர் பார்க், மின்னணுவியல் பற்றிய பிரிவு, இயற்பியல் பிரிவு என பல சுவாரஸ்யமானவற்றை காணலாம். உள்ளே நுழைந்த உடன் ஒரு இயற்கை சூழ்ந்த அமைப்பை நீங்கள் உணரலாம்
உள்ளே சிறுவர்களுக்கான ஊஞ்சல், மற்றும் அதை சார்ந்த விளையாட்டுகள் இருக்கும். சிறுவர்கள் மட்டும் இன்றி அனைவரும் விளையாட கூடிய பல இயற்பியல் சார்ந்த நுணுக்கங்கள் நம் கண் முன்னே இருக்கும்
அதையும் தாண்டி செல்ல அங்கு டைனோசர் பார்க் உள்ளது. அங்கு அனைத்துவகையான டைனோசர் வகைகளும், அசையும் வடிவில் உறுமல் சத்தத்துடன் இயக்கப்படும். பார்ப்பதற்கு நிஜமான டைனோசர் போலவும் தலையை அசைக்கும்போதும் குழந்தைகள் பயந்துகொண்டே ரசிப்பார்கள்
ஒவ்வொரு டைனோசர் உருவத்தின் பக்கத்தில் உள்ள பலகையிலும்அந்த டைனோசர் பற்றிய முழு விளக்கங்கள் கொடுக்கப்பட்டு இருக்கும்
அதற்கு அடுத்ததாகபறவைகள் மற்றும் உயிரினங்களை காணலாம். கூண்டிற்குள் புறா, வாத்து, நெருப்பு கோழி போன்ற பறவைகளை காணலாம். அடுத்த கூண்டிற்குள் முயல்கள் மற்றும் சிறு வெள்ளை எலிகளை காணலாம்
பல அறிவியல் சார்ந்த விசயங்களை நமக்கு எளிதில் புரியும் வகையில் விளையாட்டாக அமைக்கப்பட்டு இருக்கும். 2வது தளத்தில் எலக்ட்ரானிக்ஸ் பற்றிய அறிவியல் ஜாலங்கள் அடங்கியிருக்கும்
இது தவிர மேல உள்ள மாய கண்ணாடி பகுதி பார்ப்பவரை மிரள வைக்கும். கண்ணாடியில் இவ்ளோ விஷயங்கள் செய்ய முடியுமா என நம்மை யோசிக்க வைக்கும். இது மட்டுமின்றி இங்கு கோளரங்கம், 3D தியேட்டர் என பல அரங்கு தனியே உள்ளது
கோளரங்கம் என்பது வானியலை உங்கள் கண் முன்னே கொண்டு வருவது. நீங்கள் வானத்திற்கே நேரடியாக சென்று சூரியன் மற்றும் பிற கோள்களை அருகில் இருந்து பார்ப்பது போல ஒரு மாயத்தை இது ஏற்படுத்துகிறது
முப்பரிமாண திரையரங்கம் ஆனது நீங்கள் திரையில் பார்க்கும் காட்சியை உங்கள் கண்ணுக்கு அருகில் கொண்டுவருவது ஆகும்
இந்த கோடை விடுமுறையை குதூகலமாக கொண்டாட குடும்பத்துடன் நேரில் ஒரு முறை மாவட்ட அறிவியல் மையத்திற்கு சென்று பார்க்கலாம்