கர்ப்பிணிகள் செய்ய வேண்டியவை என்ன... எளிமையாக விளக்கும்  அரசு செவிலியர்.!

திருநெல்வேலி மாவட்டம் மனகாவலன் பிள்ளை மருத்துவமனையில் கிராம அரசு செவிலியராக கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக விஜயலட்சுமி என்பவர் பணிபுரிந்து வருகிறார்

இவர் பாளையங்கோட்டையில் உள்ள சாரதி மழலியர் பள்ளியில் வைத்து கர்ப்பிணிகளுக்கு கருவுற்ற நாள் முதல் பிரசவக்காலம் வரை கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டியவை என்ன, செய்ய கூடாதவை என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்

அப்போது அவர் பேசுவையில், “கர்ப்பத்தின் மூன்றாம் ட்ரைமெஸ்டர் (Third Trimester) காலம் தான் குழந்தைகளுக்குள் வேகமான வளர்ச்சி நடைபெறும். குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை உங்களிடமிருந்து பெறப்போகிறது

அதனால் குழந்தைக்கு தேவையான அளவு ஊட்டச்சத்தை எடுத்துகொள்ளுங்கள் .அதற்கேற்ப ஆரோக்கியமான உணவை எடுப்பதில் கவனம் செலுத்துங்கள்

குழந்தையின் அசைவுகளை கண்காணியுங்கள். கர்ப்ப காலத்தில் குழந்தையின் அசைவு குறைவாக இருந்தாலோ எண்ணிக்கை குறைந்தாலோ ஏதேனும் கவலைப்படுவதற்கு இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்

மகப்பேறுக்கு முற்பட்ட மருத்துவரின் பரிசோதனை அவசியம். உங்கள் குழந்தையின் பிறப்பு நல்ல நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த சில வழக்கமான அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பரிசோதனைகள் மற்றும் பெற்றோர் ரீதியிலான பரிசோதனைகள் எதிர்பார்க்கலாம்

Stories

More

தஞ்சை அருகே சுற்றுலா தளமாக மாறி வரும் குப்பை கிடங்கு..! 

சென்னை அருகே இப்படி ஒரு இடமா..

கன்னியாகுமரியில் மறைந்திருக்கும் கண்கவர் அரண்மனை பற்றி தெரியுமா?

அதை தவிர்க்காமல் சரியான நேரத்தில் எடுத்துகொள்ளுங்கள். முதல் முறை கருத்தரித்தவர்கள் பிரசவ முறைகள் குறித்த வகுப்புகளை பற்றி அறிந்துகொள்வது நல்லது. தாய்ப்பால் வகுப்புகள் சிபிஆர் வகுப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என தெரிவித்தார்

காண்போரை பிரமிக்க வைத்த கர்ண சரித்திர நாட்டிய நிகழ்ச்சி.!