தீராத வினைகளை தீர்க்கும் பேரளம் சுயம்பு நாதர் கோயில்.!

திருவாரூர் மாவட்டம், பேரளம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பவானி அம்மன் சமோத ஸ்ரீ சுயம்பு நாத சுவாமி ஆலயம்

தமிழகத்தின் சிறப்புவாய்ந்த சிவாலயங்களில் ஒன்றாகவும், பாடல் பெற்ற ஸ்தலமாகவும் விளங்குகிறது

தருமை ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோவிலில் கார்த்தான ரிஷி முனிவர் தவம் இருந்து சிவபெருமானை வழிபட்டதாகவும், சிவபெருமான் கார்த்தானா ரிஷி முனிவருக்கு சுயம்பு நாதராக காட்சியளித்ததாக தல புராணம் கூறுகிறது

இந்த ஆலயத்தின் ஸ்தல விருச்சமான வன்னி மரத்தின் பூக்களை கொண்டு இறைவனை வழிபட்டால் தீராத வியாதிகள் தீரும்

இந்த ஆலயத்தில் திருநீரைக் கொண்டு முரத்தில் ஸ்ரீ பவானி அம்மன் சமோத ஸ்ரீ சுயம்பு நாத சுவாமி திருநாமத்தை எழுதி மூல மந்திரத்தால் பூஜிக்கப்படும்

இந்த திருநீரை 48 நாட்கள் திருநீர் அணிந்தும் சாப்பிட்டும் வந்தால் வியாதிகள் நீங்கும் என்பது ஐதீகம்

பாளையங்கோட்டை உச்சினி மாகாளி அம்பாள் தல வரலாறு பற்றி தெரியுமா.?