கன்னியாகுமரியில் ஒரு நாளில் சுற்றிப்பார்க்க டாப் 5 சூப்பர் இடங்கள்.!

1

திரிவேணி சங்கமம்

கன்னியாகுமரியில் வங்காள விரிகுடா, அரபிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் என மூன்று கடல்களும் சங்கமிக்கின்றது

திரிவேணி சங்கமம்

இந்தியாவின் தென்முனையில் உள்ள இந்த திரிவேணி சங்கமம் புனித நீராடும் இடம் மற்றும் சர்வதேச சுற்றுலாத்தலம் ஆகும்

2

விவேகானந்தர் நினைவு மண்டபம்

கன்னியாகுமரியில் இருக்கும் விவேகானந்தர் பாறையின் மேல் இந்த விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்துள்ளது

விவேகானந்தர் நினைவு மண்டபம்

1892ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் தேதி கன்னியாகுமரி வந்த விவேகானந்தர் கடலுக்குள் நீந்திச் சென்று அங்கிருந்த பாறையில் மூன்று நாட்கள் கடும் தவம் இருந்த இடத்தில் இம்மண்டபம் 2 செப்டம்பர் 1970 அன்று அமைக்கப்பட்டது

3

திருவள்ளுவர் சிலை

திருக்குறள் எழுதிய திருவள்ளுவருக்குத் தமிழ்நாடு அரசு குமரிக் கடலில், நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைத்த 133 அடி உயரச் சிலை ஆகும்

திருவள்ளுவர் சிலை

இந்த சிலை அமைக்கும் பணி 1990ஆம் ஆண்டு செப்டம்பர் 6இல் தொடங்கப்பட்டு 2000ஆம் ஆண்டு ஜனவரி 1இல் திறக்கப்பட்டது

4

காட்சி கோபுரம்

இந்த உயரமான கோபுரத்திலிருந்து காணும் போது கடல், வானம் மற்றும் சுற்றியுள்ள நிலப்பரப்பின் பரந்த காட்சியை வழங்குகிறது

காதுகள் சொல்லும் உங்கள் குணாதிசியம் என்ன.?

கம்ப்யூட்டர் கீ-போர்ட்டில் இதை கவனிச்சிருக்கீங்களா.?

ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு விமானமா? எங்கே தெரியுமா?

More Stories.

காட்சி கோபுரம்

இதிலிருந்து விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, கன்னியாகுமரி கோவில் போன்ற சுற்றுலா தளங்களைக் காண முடியும்

காட்சி கோபுரம்

சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் காட்சிகள் கோபுரத்திலிருந்து பார்க்கும்போது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் என்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் இங்கு வருகை தருகின்றனர்

5

குமரியில் ஏழுமலையான்

கன்னியாகுமரி கடற்கரை அருகில் உலகப்புகழ் பெற்ற திருப்பதி வெங்கடாச்சலபதி கோவில் போன்றே ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டுள்ளது

குமரியில் ஏழுமலையான்

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பொதுமக்கள் தரிசனத்திற்காகத் திறக்கப்பட்டு வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு நேரங்களில் மூடப்படும்

next

இந்தியாவில் கோடைக் காலத்திலும் பனிப்பொழிவை அனுபவிக்க 9 சிறந்த இடங்கள்.!