ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட நீர்வீழ்ச்சியா...  எல்க் நீர்வீழ்ச்சிக்கு படையெடுக்கும் பயணிகள்.!

கோத்தகிரி நகரப் பகுதியிலிருந்து கூக்கல்தொரை செல்லும் பாதையில் உயிலட்டி கிராமத்தின் அருகில் அமைந்துள்ளது, இந்த உயிலட்டி நீர்வீழ்ச்சி

சாலைகளில் செல்வோருக்கு நீர்வீழ்ச்சியின் சத்தம் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இதனாலேயே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு செல்கின்றனர்

வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நீர்வீழ்ச்சியின் அருகில் சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்துச் செல்ல வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது

சாலையிலிருந்து நீர்வீழ்ச்சிக்கு தேயிலை தோட்டங்களில் வழியாக ஒற்றையடிப் பாதையிலே செல்ல வேண்டும்

இதுநாள் வரையிலும் உள்ளூர் மக்களுக்குத் தெரிந்த இந்த நீர்வீழ்ச்சி தற்பொழுது அதிக அளவு சுற்றுலாப் பயணிகளையும் ஈர்த்துள்ளது என தெரிவிக்கின்றனர்

இந்த நீர்வீழ்ச்சிக்கு கோத்தகிரியிலிருந்து 9 கிலோமீட்டர் தூரமும், ஊட்டியிலிருந்து 33 கிலோமீட்டர் தூரமும் குன்னூரிலிருந்து 26 கிலோ மீட்டர் தூரமும் உள்ளது

இந்த நீர்வீழ்ச்சி பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அதிக அளவு மழையினால் வரும் நீரினை ரசிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டது எனவும் தெரிவிக்கின்றனர் உள்ளூர் வாசிகள்

இந்த நீர்வீழ்ச்சி எல்க் ஃபால்ஸ் எனவும் அழைக்கப்படுகிறது. இங்கு வார இறுதி நாட்களில் கோவை, திருப்பூர் ஆகிய பகுதிகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர்

சமீபத்தில் இரண்டு ஆண்டுகளாகவே வெளியூர் சுற்றுலாப் பயணிகள் இந்த நீர்வீழ்ச்சிக்கு அதிகம் வருகை புரிகின்றனர்

மடித்தொரை, கக்குச்சி ஆகிய பகுதிகளிலிருந்து வரும் நீர் இந்த நீர்வீழ்ச்சியின் வழியாக பவானிசாகர் அணையைச் சென்றடைகிறது என கூறப்படுகிறது

next

பூங்காவில் இது மட்டும் தான் மிஸ்ஸிங்… சிவகங்கை பூங்கா குறித்து தஞ்சை மக்களின் கருத்து.!