புதுச்சேரி கைவினைப் பொருள்கள் கண்காட்சி... சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பங்கேற்பு.!

இந்தியாவில் உள்ள 40க்கும் மேற்பட்ட கைவினைக் கலைஞர்கள் பங்குபெற்ற கண்காட்சி புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் நடைபெற்றது

புதுச்சேரி கைவினைக் கவுன்சில் (CCP) சார்பில் புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கைவினைக் குழுக்களின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த கைவினைஞர்களின் கைவினைப் பொருட்கள் மற்றும்

நிலையான வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, இந்திய கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுத் துறையில் பழமையான மற்றும் புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒன்றான Crafts Council of India (CCI) இணைக்கப்பட்டுள்ளது

இது 1964 ஆம் ஆண்டு சீர்திருத்தவாதி மற்றும் சுதந்திரப் போராட்ட வீரரான ஸ்ரீமதி அவர்களால் நிறுவப்பட்டது

கமலாதேவி சட்டோபாத்யாய் தேசம் நவீனத்துவத்திற்கு மாறுவதில் இந்தியாவின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் அவரது முன்னோடி முயற்சிகளில் செயல்பட்டு வருகிறது

இந்நிலையில் புதுச்சேரி கைவினைக் கவுன்சில், INTACH பாண்டிச்சேரியுடன் இணைந்து “புது வசந்தம்”, கைவினைப்பொருட்கள் பஜார்,

கைவினைப் பொருட்கள், கைத்தறிகள் மற்றும் வீட்டு அலங்கார கண்காட்சி காந்தி திடலுக்கு எதிரில் உள்ள கிராஃப்ட்ஸ் பஜார் அரங்கில் நடைபெற்றது

'V' என்ற எழுத்தில் பெயர் தொடங்குகிறதா..?

காணாமல் போன ஸ்மார்ட் போனை கண்டுபிடிப்பது எப்படி.?

1700 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை  கண்டுபிடிப்பு...

More Stories.

இந்த கண்காட்சியில் மதுராவில் இருந்து சாஞ்சி கலை, ஃபிரோசாபாத் UP யில் இருந்து கண்ணாடி கைவினைப்பொருட்கள், செட்டிநாடு புடவைகள்,

குஜராத்தில் இருந்து அஜ்ரக் இயற்கை சாயம் பூசப்பட்ட ஆடைகள், கொல்கத்தாவில் இருந்து காந்தா & பாடிக் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து, அந்தந்த மாநில சிறப்பு பொருட்கள் காட்சி படுத்தப்பட்டிருந்தன