முடவாட்டுக்கால் கிழங்கை ஒரு சைவ ஆட்டுக்கால் என்று கூட சொல்வார்கள்
ஆட்டுக்காலை போலவே ரோமங்கள் நிறைந்து காணப்படும் இந்த முடவாட்டுக்கால் கிழங்கு நடக்க சிரமப்படும் முடவனைக் கூட சரிசெய்யும் என்பார்கள்
பார்ப்பதற்கு ஆட்டுக் கால் போல தோற்றம் கொண்ட இந்த கிழங்கைத் தோல் சீவினால் உள்ளே வெள்ளையாக இஞ்சி போல இருக்கும். இதை சாப்பிடுவதால் அவ்வளவு நன்மைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது
முடவாட்டுக்கால் உடலில் உள்ள ஏராளமான நோய்களைத் தீர்க்க கூடியது. கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான நோய்களைத் தீர்க்கும் என்று சொல்கிறார்கள். முடவாட்டுக்கால் பெரும்பாலும் மலைப் பிரதேசங்களில் விளையக்கூடியது
கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்திற்கு மேல் உள்ள மலைப்பகுதிகளில் உள்ள பாறைகளின் இடுக்குகளுக்கு இடையே இந்த முடவாட்டுக்கால் வளரும் தன்மை கொண்டது
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் கொல்லிமலை மற்றும் ஏற்காடு ஆகிய இரண்டு இடங்களில் இந்த கிழங்கு அதிக அளவில் கிடைக்கிறது
முடவாட்டுக்கால் கிழங்கு என்று சொன்னாலே அது கொல்லிமலை தான் என்கிற அளவிற்கு முடவாட்டுக்கால் விளையும் பிரதான இடமாக கொல்லிமலை இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக ஏற்காட்டில் இது அதிகப்படியாக முடவாட்டுக்கால் கிழங்கு கிடைக்கிறது
மூட்டு சம்பந்தமான வலிகளுக்கு நிவாரணியாக இருப்பதால் ஏற்காட்டிற்குச் சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் முடவாட்டுக்கால் கிழங்கினைப் பார்த்து வாங்கி செல்கின்றனர்
முடவாட்டுக்கால் கிழங்கினைச் சூப்பு வைத்துப் பருகினால், பல்வேறு நன்மைகள் உள்ளதாகக் கூறுகின்றனர்
மாரடைப்பு வராமல் தடுக்க உதவும் 8 உணவு மாற்றங்கள்.!