திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற அகஸ்தியர் அருவி உள்ளது.
இந்த அருவியில் வருடம் முழுவதும் தண்ணீர் விழும் என்பதால் நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் கடந்த 17ஆம் தேதி கன மழை பெய்ததால் பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு செல்லும் வழியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது
அகஸ்தியர் அருவியிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் அகஸ்தியர் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது
இதனைத் தொடர்ந்து சில நாட்கள் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து படிப்படியாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் மீண்டும் சுற்றுலா பயணிகள் அகஸ்தியர் அருவிக்கு குளிக்க செல்லதடை செய்யப்பட்டுள்ளது
சொரிமுத்து அய்யனார் கோயிலில் சாமி தரிசனம் செய்ய மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. ஆற்றில் குளிக்க அனுமதி இல்லை. மறு அறிவிப்பு வரும் வரை இந்த உத்தரவு தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்