கொல்லிமலை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி.!

நாமக்கல் மாவட்டத்தின் மூலிகை சுற்றுலா தளமான கொல்லிமலை வனப்பகுதியில் உள்ள கிராமப் பகுதிகளில் ஒரு மாதமாக தொடர்ந்து கனமழை பெய்து வந்தது

இதனால் கொல்லிமலையில் உள்ள ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, நம் அருவி, மாசிலா அருவி, புளியஞ்சோலையில் நீர்வரத்து அதிகரித்து ஆர்ப்பரித்து சென்றது

சுற்றுலா பயணியரின் பாதுகாப்பு கருதி, நம் அருவி, மாசிலா அருவி, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, புளியஞ்சோலை பகுதிக்கு செல்லவும், குளிக்கவும் சில நாட்களாக தடை விதிக்கபட்டிருந்தது

இந்நிலையில் தற்பொழுது நாமக்கல் கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, நம் அருவி, மாசிலா அருவி, 

புளியஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணியர் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்

தடை நீக்கப்பட்டு, சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்பட்ட  மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் கொல்லி மலைக்கு வந்த வண்ணமாக உள்ளனர்

பென்சிலுக்கு பின்னாடி கருப்பு கலர் ஏன்னு தெரியுமா?

டாபர்மேன் நாய்களின் வால்கள் வெட்டப்படுவது ஏன் தெரியுமா?

ஒருவரை பிரிந்து செல்லும்போது ஏன் 'டா டா' காட்டுறோம் தெரியுமா..?

More Stories.

next

50 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கிய அக்னி தீர்த்தம் கடல்… அதிர்ந்து போன பக்தர்கள்.!