அகஸ்தியர், மணிமுத்தாறு அருவிகளில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது
புலிகள் கணக்கெடுப்பு பணி வருகிற 20-ஆம் தேதி தொடங்க உள்ளதால் நெல்லை மாவட்டம் அகஸ்தியர், மணிமுத்தாறு அருவிகளில் ஒரு வாரம் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
இது குறித்து நெல்லை மாவட்ட வனத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் ஆண்டு தோறும் பிப்ரவரியில் புலிகள் கணக்கெடுப்பு நடைபெறுவது வழக்கம்
இந்த ஆண்டு வரும் 20- ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட அம்பை, பாபநாசம், கடையம், முண்டந்துறை உள்ளிட்ட நான்கு வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பு தொடங்குகிறது
இதனால் வரும் 20 -ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை அகஸ்தியர், மணிமுத்தாறு அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி இல்லை
மேலும் சுற்றுலா, சொரிமுத்து அய்யனார் கோயில் விடுதிக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது
பாபநாசம் வனசோதனை சாவடி, மணிமுத்தாறு வனசோதனை சாவடி மூடப்படுகின்றன
எனவே பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது