கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காற்றாடி மலை, தேவசகாயம் மவுண்ட் பகுதியில் அமைந்துள்ள இரட்டை தேவாலயங்கள் மிகவும் பிரசித்தி பெற்ற தேவாலயங்கள் ஆகும்
இந்த தேவாலயங்கள் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை மற்றும் வியாகுல அன்னை திருத்தலங்கள் ஆகும்
இந்த தேவாலயங்களுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், கேரளம் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் அதிகம் வருகை புரிவது உண்டு
இந்த காற்றாடி மலைப்பகுதிக்கு அங்குள்ள தேவாலயங்கள் மட்டுமின்றி, அந்த மலைக்கு இன்னொரு சிறப்பும் உண்டு
அதுவே இங்கு ஆன்மிக நாட்டமுள்ளவர்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளும் அதிகம் வருகை தர காரணமாக உள்ளது
இந்தக் காற்றாடி மலைப்பகுதியில், மலைகளுக்கு நடுவே மணி அடிச்சான் பாறை என்ற பாறை பகுதி உண்டு
இந்தப் பாறையில் கல், இரும்பு போன்ற பொருட்களைக் கொண்டு தட்டும் பொழுது அது மணி அடிப்பது போல வித்தியாசமான சத்தம் எழுப்புகிறது
இதற்குக் காரணம் இந்த மணி அடிச்சான் பாறையானது மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை சுட்டுக் கொல்லப்பட்ட பொழுது பாறை வெடித்து உருவானதாகக் கூறப்படுகிறது
இந்நிலையில் தற்போது பல பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் இந்த ஆரல்வாய்மொழி காற்றாடி மலைப்பகுதிக்கு வருகை புரிந்து மணி அடிச்சான் பாறையைப் பார்த்துச் செல்கின்றனர்
அதிகபட்ச ஆரோக்கிய நன்மைகளைப் பெற சியா விதைகளை எப்படி குடிக்க வேண்டும்.?