சுற்றுலாப் பயணிகளுக்கு சூப்பரான வரவேற்பு... ஊட்டியில் தோடர் வாழ்வியலை உணர்த்தும் அமைப்பு.!

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம் பல புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களைக் கொண்டுள்ளது. இதனால் பல பகுதிகளிலிருந்தும் நீலகிரிக்கு பயணிகள் சுற்றுலா வருகின்றனர்

நீலகிரிக்கு மைசூர் மற்றும் கர்நாடக பகுதியிலிருந்தும், கேரள மாநிலத்திலிருந்தும் கூடலூர் வழியாக ஊட்டிக்கு வருகை புரிபவர்களுக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கும் விதமாக

ஊட்டி அடுத்துள்ள HPF பகுதியில் பழங்குடியினர் உருவ பொம்மைகளுடன் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் விதமாக உருவங்களும் அவர்களது பாரம்பரிய வீடுகளையும் காட்சிப்படுத்தியுள்ளனர்

மேலும் இங்கு வருகை புரிபவர்களுக்கு காடுகளிலிருந்து யானைகள் வரவேற்கும் விதமாக இரண்டு யானை பொம்மைகளும் அதன் பின்புறம் அழகிய இரண்டு மான் பொம்மைகளும் காட்சிப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது

நீலகிரிக்கு வருகை புரிபவர்களுக்கு இந்தப் பகுதியில் இருபுறமும், சாலைகளின் நடுவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த அலங்காரப் பொம்மைகள் & பழங்குடியினர் அமைப்பினை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்துச் செல்கின்றனர்

இந்த இடம் முன்பொரு காலகட்டத்தில் மிகவும் பிஸியான இடமாக இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த இடத்தில் இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் இயங்கி வந்த பொழுது எப்பொழுதுமே ஆட்கள் நடமாட்டத்துடன் இயங்கி வந்த இடம்

ஆனால் தற்பொழுது வெறிச்சோடி இருப்பதால் இந்த வரவேற்பு பொம்மைகள் சுற்றுலாப் பயணிகளை ஒரு நிமிடம் நிறுத்தி கவனித்துச் செல்லும் அளவிற்குக் கவனத்தை ஈர்த்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

next

இந்த 5 பழங்களை சர்க்கரை நோயாளிகள் கவலைப்படாமல் சாப்பிடலாம்.!