விடுமுறை தினம் என்பதால் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
சென்னை வண்டலூர் அருகே அமைந்துள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சுமார் 180 வகையான 2500 க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது
இந்த உயிரியல் பூங்காவிற்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பார்வையாளர்கள் அதிக அளவில் வருகை புரிவார்கள்
அதன்படி தற்போது தொடர் விடுமுறை காரணமாக வண்டலூர் பூங்காவிற்கு பார்வையாளர்கள் அதிக அளவில் வருகை புரிந்தார்கள்
குறிப்பாக பூங்காவில் உள்ள விலங்குகளை கண்டு ரசித்துக் கொண்டும் தங்களது செல்போன்களில் செல்பி எடுத்துக் கொண்டும் ஆரவாரம் செய்து பகிர்ந்தனர்