ராமேஸ்வரத்தில் சுற்றுச்சூழல் சார்ந்த இரண்டு புதிய திட்டங்கள் தொடக்கம். அரியவகை உயிரினங்களை பாதுகாக்க தனுஷ்கோடியில் இருந்து அரிச்சல் முனைக்கு பேருந்து சேவை தொடங்கும் பணிகள் மும்மரம்
ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கில் அமைந்து ராமேஸ்வரம் தீவானது, பல்லுயிர் மற்றும் இயற்கை அழகுகள் நிறைந்த தனித்துவமான தீவாகும்
இங்கு ஆன்மீக ஸ்தலங்களும் வரலாற்று சிறப்புகளும் நிறைந்த இடங்கள் அதிகளவில் உள்ளது
ராமேஸ்வரம் தீவின் சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலா உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் விதத்தில் தனுஷ்கோடி வாழும் கடல் ஆமை, பவளப்பாறைகள் போன்ற அரியவகை உயிரினங்கள்
மற்றும் புலம்பெயர்ந்து வலசைக்காக வரும் பறவைகளை காக்கும் நோக்கில் இரண்டு சுற்றுச்சூழல் சுற்றுலா தளங்களானது அமைக்க உள்ளனர்
இரண்டு சுற்றுச்சூழல் இடங்களில் ஒன்று அக்னி தீர்த்தம் கடற்கரையின் அருகிலும் மற்றொன்று குந்துகாலிலும் அமைக்க உள்ளது
இதில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மரத்தாலான ஜெட்டிகள் மற்றும் கண்ணாடியாலான அலுமினிய படகுகள் ஆகியவை சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது
மேலும், மன்னார் வளைகுடா அரியவகை உயிரினங்கள், வலசை வரும் பறவைகளின் பாதுகாத்து மாசுபாட்டினை குறைக்கும் வகையில் தனுஷ்கோடியில் இருந்து அரிச்சல்முனை என ஜந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு 7 பசுமை பேருந்துகள் இயக்கப்படுவதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
இந்த திட்டத்தின் மூலம் இயற்கை சூழலையும் பாதுகாப்பது மட்டுமின்றி, தீவில் வாழும் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருமானம் மேம்படவும் வழிவகை செய்ய இயலும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது