தஞ்சாவூர் சரபோஜி கல்லூரி வளாகத்தில் தஞ்சாவூர் மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் நூலகம் மற்றும் அறிவு சார் மையம் கடந்த மாதம் துவங்கப்பட்டது
இரண்டு தளங்கள் உள்ள இந்த மையத்தில் போட்டித் தேர்வுகளுக்கு படிக்கக் கூடிய மாணவர்களுக்கு ஏற்ற வகையில் விசாலமான வகுப்பறைகள் கணினி வாசிப்பு பகுதி, கூட்டு அரங்கு, நூலகம் உள்ளிட்ட சகல வசதிகளோடு மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன
மேலும் ஃவைபை வசதிகளுடன் கூடிய கணினி அமைக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இலவசமாக போட்டித் தேர்வுகளுக்கு உண்டான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது
வெள்ளிக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் கூறுகையில்’ படிப்பதற்கு பல்வேறு வசதிகளோடு இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
குரூப் ஸ்டடி செய்வதற்கும், தனியாக அமர்ந்து படிப்பதற்கும் அருமையாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அன்லிமிடெட் இணையதள கணினி வசதி உள்ளதும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
மாணவர்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் படிப்பதற்கு ஏற்ற அனைத்து சூழலும் இங்கு நிறைந்துள்ளன என்று கூறினர்