யார் இந்த சோபிதா துலிபாலா.?

சொத்து மதிப்பு, கல்வித் தகுதி மற்றும் பல...

நாக சைதன்யா-வை திருமணம் செய்துகொள்ளும் சோபிதா துலிபாலா ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர்

சோபிதா துலிபாலா விசாகப்பட்டினத்தில் உள்ள புகழ்பெற்ற விசாகா வேலி பள்ளியில் பயின்றார்

அதன் பிறகு, மும்பையில் உள்ள எச்.ஆர். வணிகவியல் மற்றும் பொருளாதாரக் கல்லூரியில் வணிகவியலில் இளங்கலைப் பட்டமும், வணிகவியல் மற்றும் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்

32 வயதாகும் இவர், 2013-ஆம் ஆண்டு Femina Miss India Earth அழகிப் போட்டியில் வெற்றிவாகை சூடியவர். அத்துடன் பரத நாட்டியம், குச்சிப்புடி கலைகளை கற்றுத் தேர்ந்தவர்

இவர் பாலிவுட்டில் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் 2016-ஆம் ஆண்டு வெளியான ‘ராமன் ராகவ்-2.0’ படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு, தெலுங்கு, தமிழ், மலையாளம் படங்களிலும் நடித்திருக்கிறார்

சோபிதா துலிபாலா பல்வேறு படங்களிலும், Night Manager போன்ற இணையத் தொடர்களிலும் நடித்திருந்தாலும், தமிழ் ரசிகர்களிடம் அவரை கொண்டு சேர்த்த திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’

அந்த திரைப்படத்தில் அருண்மொழிவர்மனின் காதலியான வானதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் சின்ன சின்ன முக பாவனைகள் மூலம் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்

ஒரு படத்துக்கு 70 லட்சம் முதல் 1 கோடி வரை சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது

சோபிதா துலிபாலாவின் சொத்து மதிப்பு ரூ. 7 முதல் 10 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது

next

சமந்தா குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை சோபிதா…