நாம் வாழும் இந்த உலகில் செடிகளும் மரங்களும் பல்வேறு வகையான உயிரினங்களும் வாழ்ந்து வருகின்றன. மனிதன் ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை இயற்கை சார்ந்தே வாழ்கிறான்
நம்மை சுற்றி ஆயிரக்கணக்கான மூலிகைகள் இருக்கின்றன. அவை எண்ணிலடங்கா நோய்களையும் எளிதில் குணப்படுத்தக் கூடியவை
அவற்றில் ஒன்றுதான் கரிசலாங்கண்ணி என்ற செடி வகை. கரிசலாங்கண்ணி முடி வளர்ச்சிக்காகவே என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும் அவற்றில் அதிகமான மருத்துவ குணங்கள் இருக்கின்றது
இதுகுறித்து பாட்டி சொல்லும் வைத்தியம், "நான் சிறு வயதாக இருக்கும் போதிலிருந்து கரிசலாங்கண்ணி இலையை பயன்படுத்தி வருகிறோம் தற்போது என் பிள்ளை பேரப்பிள்ளை என அனைவருக்கும் பல்வேறு விதமான நோய்களை தீர்க்க கரிசலாங்கண்ணியை பயன்படுத்தி வருகிறோம்
குறிப்பாக தலைமுடி சார்ந்த பிரச்சினைகளுக்கு உடலில் ஏற்படும் காயங்களுக்கு உடல் பொலிவிற்கு என ஏராளமான பயன்களை இந்த கரிசலாங்கண்ணி நமக்கு அளிக்கிறது
தற்போது அனைவரும் பயன்படுத்தி வரும் ஷாம்புகள் குறிப்பிட நேரம் வரையே கூந்தலுக்கு வாசனை வருகிறது ஆனால் கரிசலாங்கண்ணியை உபயோகிக்கும் போது அடுத்த முறை குளிக்கும் வரை அந்த வாசனை இருக்கும் பலரும் இது பற்றி தெரிந்து கொள்வதில்லை " என்றும் தெரிவித்தார்