இரவில் சரியாக தூக்கம் வராமல் அவதி படுகிறீர்களா? இங்கே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் உங்களுக்கு உதவலாம்
தினசரி யோகா மற்றும் தியானத்தை மேற்கொள்வது மன அழுத்தத்தை குறைத்து மனதை அமைதிப்படுத்த உதவுகிறது. இதனால் உங்களுக்கு சிறந்த தூக்கம் கிடைக்கும்
தினசரி உடற்பயிற்சி செய்வதால் மூளையில் செரோடோனின் உற்பத்தியை அதிகரிப்பதனால் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலின் அளவைக் குறைக்கிறது
பகலில் 2 மணிநேரம் அல்லது அதற்கு மேற்பட்டு தூங்கினால் இரவில் மோசமான தூக்கத்திற்கு வழிவகுக்கும்
நல்ல இசை மனதை அமைதிப்படுத்தி தூக்கத்தை மேம்படுத்தும். இது நாள்பட்ட தூக்கக் கோளாறுகளைப் போக்கவும் உதவுகிறது
இரவில் தூங்கும் முன் எதையேனும் வாசிப்பது தூக்கத்தை ஊக்குவிக்கும் என நம்பப்படுகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு இது ஒரு நல்ல செயலாக இருக்கும்
படுக்கைக்கு முன் காபி, எனர்ஜி பானங்கள், ஹாட் சாக்லேட், சோடா போன்றவற்றை குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஆனால் கெமோமில் டீ போன்றவை நல்ல தூக்கத்தை ஊக்குவிக்கும்
உறங்கும் முன் உங்கள் எதிர்மறை உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் தொடர்ந்து எழுதுவது உங்கள் மனதை அமைதிப்படுத்தி நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும்
உறக்கம் வரும் முன் படுக்கைக்கு சென்று கட்டாயப்படுத்தி உறங்க முயற்சித்தால், உறங்க சிரமப்படுவதுடன் ஆழ்ந்த உறக்கத்தை கணிசமாக குறைக்கும்
உறங்கும் முன் மொபைல் ஃபோன் அல்லது பிற எலெக்ட்ரானிக் கேட்ஜெட்டுகளை பயன்படுத்துவது உங்கள் மூளை ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்லவிடாமல் தடுக்கும். மேலும் கண்களுக்கும் கேடு