வரலட்சுமி நோன்பு.. செங்கல்பட்டில் அம்மனுக்கு சிறப்பு பூஜை.!

ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்பு வருகின்ற வெள்ளிக்கிழமையில் கொண்டாடப்படுகிற விரதமே வரலட்சுமி விரதம்

இந்த விரதத்தினையொட்டி நாடெங்கிலும் உள்ள இந்து ஆலயங்கல் மற்றும் வீடுகளில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன

அஷ்டலட்சுமியரின் அம்சமாக இருந்து கேட்கும் வரங்களை அருள்பவளே வரலட்சுமி. வரலட்சுமி விரதம் இருந்து வழிபட்டால் குறைவில்லாத செல்வம், திருமண வரம், குழந்தை பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை

ஆடி அமாவாசைக்குப் பின்னர் வளர்பிறையில் பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமைதான் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கும் நாள். பெரும்பாலும் வரலட்சுமி விரதம் ஆவணி மாதத்திலேயே வரும்

அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்கள் மற்றும் ஒரு சில வீடுகளில் வரலட்சுமி நோன்பு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் வா.ஊ.சி தெருவில் டில்லிரானி என்பவர் இல்லத்தில் வரலட்சுமி விரதம் சிறப்பு பூஜைகளுடன் கொண்டாடப்பட்டது

கலசம் வைத்து மகாலட்சுமி போல உருவம் அலங்கரித்து வழிபாடுகள் நடைபெற்றது

சிறு குழந்தைகள், கன்னிபெண்கள், திருமணம் ஆன சுமங்கலிபெண்கள், மூத்த குடிமக்களும் இந்த வழிபாட்டில் பங்கேற்றனர்

இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் மஞ்சள், குங்குமம், நோன்பு கயிறு, வளையல், துணி போன்றவை பிரசாதமாக வழங்கப்பட்டது

திருச்சி பூம்புகார் விற்பனை நிலையத்தில் என்னென்ன பொருட்கள் இருக்கு தெரியுமா.?