தீபாவளி பண்டிகைக்கு முடிவடைந்து, விழுப்புரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பொது மக்கள், சென்னை, சேலம், திருச்சி போன்ற ஊர்களுக்கு செல்ல படை எடுத்துள்ளனர்
அரசுப் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களில் கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் மற்ற மாவட்டங்களுக்கு செல்ல படையெடுத்துள்ளனர்
இதனால் நீண்ட தொலைவுக்கு அணிவகுந்து நிற்கும் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் 30-க்கும் மேற்பட்ட காவலர்களும், சுங்கச் சாவடி ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்
சென்னை மாநகரில் பணியாற்றும் வெளிமாநில மற்றும் வெளியூர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் மீண்டும் வேலைக்கு செல்ல புறப்பட்டதால் பேருந்து நிலையம் மற்றும் சுங்கச்சாவடியில் கூட்டம் அலைமோதியது
இதனால் விழுப்புரதிலிருந்து சென்னை போன்ற மாநகரங்களுக்கு செல்ல பொதுமக்கள் பயணிக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் காணப்படுகிறது. மேலும் பேருந்தில் பயணிகள் படியில் அமர்ந்து படியும், தொங்கிய படியும் பயணம் செய்தனர்.
அதுமட்டுமல்லாமல் விழுப்புரம் புறவழி சாலையில் இருந்து, எல்லீஸ் சத்திரம் வழியே பாலம் வேலை நடைபெறுவதால் வாகனங்கள் அனைத்தும்,நீண்ட வரிசையில் அணிவகுத்து ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கிறது