இந்தியாவின் கிவி பழம் நம்ம ஊர் கள்ளிபழமா.?

இயற்கையோடு ஒன்றி மனிதன் வாழ்ந்த காலத்தில் பழங்கள், கிழங்குகள் என இயற்க்கையாக கிடைத்த உணவுகளை எடுத்துக் கொண்டதால் உணவே மருந்து என்ற ஆரோக்கியமான வாழ்வு அமைந்தது

ஆனால் இப்பொழுது மனிதன் செயற்கை வாழ்க்கையில் மருந்தே உணவு என வாழக்காரணம் விதை இல்லாத பழங்கள் போன்ற மனித கண்டுபிடிப்பில் மதி மயங்கிப்போனது தான்

கள்ளிப்பழத்தை தமிழில் நாகதாளி என்றும் செல்லலாம். இந்தியாவின் கிவி பழம் என அழைக்கப்படுவதின் முக்கிய காரணம் இதில் உள்ள கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் சத்துக்களும் உயர்தரமான நார்சத்தும் தான்

பெரும்பாலும் வறண்ட நிலங்களில் மட்டுமே விளையக்கூடிய இந்த கள்ளிப்பழம் ஆடு, மாடு மேய்க்கும்பொழுது நாவறட்சிக்கும், வெய்யில் ஏற்படுத்தும் உடல் சோர்வை போக்கவும், உடல் சூட்டை குறைக்கவும் கிராம புற மக்களால் பயன்படுத்தப்படுகிறது

கள்ளிச் செடி தானாகவே வேலியில் வளரக்கூடியது இதன் மலர்கள் மஞ்சள் வண்ணத்ததிலும், பழம் இரத்தம் போன்ற சிகப்பு வண்ணத்திலும் இருக்கும்

பழத்தை சுற்றிலும் முட்கள் இருப்பதால் அப்படியே சாப்பிட இயலாது. லேசாக கல்லில் தேய்த்து பின் சாப்பிடலாம். இதன் சுவையை விவரிக்க வார்த்தைகளே இல்லை

நாகதாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் குரல்வளை, பித்தப்பை, மலக்குடல் சார்ந்த அனைத்து குறைபாடுகளும் நீங்கும் எனவும் காய்ச்சல், இருமல், இரத்தம் குக்குதலும் தீரும் எனவும் ஞாபக மறதி எனப்படும் அல்ஸைமர் நோய்க்கு இது மருந்தாக பயன்படுத்தலாம்

பல ஹோட்டல்களில் ஏன் 13 நம்பர் ரூம் இருப்பதில்லை தெரியுமா?

அதிக சம்பளம்... ஆனால் யாருக்கும் ஆர்வமில்லை... உலகளவில் யாரும் செய்ய விரும்பாத வேலைகள்!

கிராமமே ஐஏஎஸ் அதிகாரிகள்.. எங்கு இருக்கு தெரியுமா?

More Stories.

இந்த பழத்தை தொடர்ந்து எடுத்துக்கொள்ளவதால் கண் பார்வை கூர்மையாகிறது என சித்த மருத்துர்களும், கிராம மக்களும் கூறுகின்றனர்

பெரும்பாலும் இன்றைய தலைமுறையினருக்கு கள்ளிப்பழம் குறித்து தெரிவதில்லை, கள்ளிப்பழத்தை சுற்றி சிறிய அளவு முட்கள் அதிக அளவில் இருக்கும் கவனமாக பறிக்க வேண்டும்

அதன் சுவை 90களின் இறுதியில் அப்படியே நின்றுவிட்டது, பல நோய்களுக்கு மருந்தாக பலரின் உயிரை காப்பாற்றிய சப்பாத்தி கள்ளிப்பழத்தின் தற்போதைய நிலை காப்பாற்றப்பட வேண்டும்

இன்னும் மார்க்கெட்டில் விற்பனைக்கென்று பேக்கெட் செய்யப்படாத பழமாக இந்த பழம் உள்ளது