தஞ்சையை அடுத்த கள்ளப் பெரம்பூரை சேர்ந்தவர் தங்கமணி. இவர் தமிழ்நாடு அரசு மின்வாரியத்தில் ஓட்டுநராக இருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்றதில் இருந்து வித்தியாசமான கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வம் இவருக்கு இருந்துள்ளது
இந்த நிலையில் பிவிசி பைப் மற்றும் உபயோகமற்ற பொருட்களை கொண்டு நேரடி நெல் விதைப்பு சாதனத்தை உருவாக்கியுள்ளார்.
அதாவது, பொதுவாக நெல் சாகுபடியில் முதலில் விதை நெல்லை கொண்டு நாற்று வளர்க்கப்பட்டு பிறகு அந்த நாற்றை பறித்து பின்னர் பெண்கள் அந்த நாற்று பயிரை கொண்டு நடவு நடுவார்கள்
ஆனால் இவர் உருவாக்கிய இந்த சாதனத்தின் மூலம் நாற்று அரித்து நடவு செய்யாமல் உழவு ஒட்டப்பட்ட வயலில் விதை நெல்லை நேரடியாக தெறிக்க விட்டு விடும்
மேலும் நேரடி நெல் விதைப்பு முறையை சாதனத்தைக் கொண்டு பல ஊர்களில் நெல் விதைப்பு செய்து வருகிறார்
மேலும் இந்த விதைப்பின் மூலம் ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை செலவு குறையும் எனவும் மகசூல் அதிகரிப்பதாகவும், நெற்பயிர் முன்கூட்டியே அறுவடை தயாராகிவிடும் என பெருமைப்பட வில்லேஜ் விஞ்ஞானி கூறுகிறார்