ரெசிபி இதோ...

கிராமத்து ஸ்டைலில் காரசாரமான மிளகு ரசம் எப்படி செய்வது.?

Flames

சளி தொல்லை ஏற்பட்டால் முதலில் நம் நினைவிற்கு வருவது ரசம் தான். அதுவும் காரசாரமாக வைத்து சாப்பிட்டால் சளி பிரச்சனை உடனே தீர்ந்துவிடும்

எனவே குழந்தைகளும் சாப்பிடும் வகையில் பருப்பு கலந்து கிராமத்து ஸ்டைலில் காரசாரமான மிளகு ரசம் எப்படி வைக்கலாம் என்று இங்கே பார்க்கலாம்

இடிக்க தேவையானவை : மிளகு - 2 டேபிள் ஸ்பூன் சீரகம் - 2 டேபிள் ஸ்பூன் பூண்டு - 6 பல் கரைசலுக்கு தேவையானவை : தக்காளி - 2 புளி கரைசல் - 1 கப் பச்சை மிளகாய் - 2 மற்ற பொருட்கள் : துவரம் பருப்பு - 1 கப் மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன் காய்ந்த சிவப்பு மிளகாய் - 1 பெருங்காய பொடி - 1 சிட்டிகை கடுகு - 1 டீஸ்பூன் சீரகம் -1 டீஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - சுவைக்கேற்ப கறிவேப்பிலை சிறிதளவு கொத்தமல்லி இலை - சிறிதளவு

தேவையான பொருட்கள்

White Scribbled Underline

முதலில் துவரம் பருப்பை வேகவைத்து தனியே வைத்துக்கொள்ளுங்கள்

Step 1

பின்னர் மிளகு, சீரகம் மற்றும் பூண்டு ஆகியவற்றை கரடுமுரடாக இடித்துக்கொள்ளவும்

Step 2

தற்போது பாத்திரம் ஒன்றில் தக்காளி, புளி கரைசல் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து தக்காளி மென்மையாக மாறும் வரை கரைத்து கொள்ளவும்

Step 3

அடுத்து கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காய தூள் ஆகியவற்றை சேர்த்து தாளித்து கொள்ளவும்

Step 4

பின்பு அதில் கரைத்து வைத்துள்ள தக்காளி கரைசலை ஊற்றி அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். இதன் பச்சை வாசனை போகும் வரை மூடி வைத்து கொதிக்க விடவும்

Step 5

பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதித்ததும், வேகவைத்த துவரம் பருப்பை சேர்த்து நன்கு கலந்துவிடவும்

Step 5

பின்னர் அதனுடன் இடித்து வைத்துள்ள மிளகு, சீரகம் பூண்டு மசாலாவை சேர்த்து நன்றாக கலந்து கொதிக்கவிடவும்

Step 6

ரசம் வாசனை வரும் வரை கொதிக்கவிட்டு இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்து இறக்கினால் காரசாரமான கிராமத்து ஸ்டைல் பருப்பு மிளகு ரசம் தயார்…

Step 7

next

உடல் எடையை விரைவாக குறைக்க உதவும் 8 பழங்கள்.!