கல்லறையில் தீபாவளி கொண்டாடும் கிராமம்.. காரணம் தெரியுமா.?

தெலங்கானா மாநிலம் கரீம்நகர் பகுதியில் இறந்த குடும்ப உறுப்பினர்களுடன் தீபாவளி கொண்டாடிய கிராம மக்கள்

இந்த மக்கள் தங்கள் பாரம்பரியத்தைப் கண்ணின் இமை போல பாதுகாத்து வருகின்றனர். அந்த வகையில் தீபாவளியையும் வித்தியாசமான முறையில் கொண்டாடுவதை பழக்கமாக வைத்துள்ளனர்

அதன்படி தீபாவளியை இறந்த தங்களின் முன்னோர்களுடன் கல்லறையில் கொண்டாடி வருகின்றனர் இந்த கிராம மக்கள்

தங்களின் இறந்த குடும்ப உறுப்பினர்களின் கல்லறையை சுத்தம் செய்து, வர்ணம் தீட்டி கல்லறைக்கு புதிய தோற்றத்தைக் கொண்டு வருவர்

Stories

More

கிறிஸ்துமஸ், சபரிமலை சீசனை முன்னிட்டு நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

மழைக்காலங்களில் பைக்கை பராமரிப்பது எப்படி தெரியுமா..

கன்னியாகுமரியில் மறைந்திருக்கும் கண்கவர் அரண்மனை பற்றி தெரியுமா?

வெளிநாடுகள் மற்றும் நாட்டின் பிற இடங்களுக்கு இடம்பெயர்ந்த குடும்ப உறுப்பினர்களும் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அன்று தவறாது இந்த நகரத்திற்கு வருகை தந்து இந்த விழாவில் கலந்துக்கொள்வர்

தீபாவளி பண்டிகையன்று அந்தி சாயும் நேரம் வரும்போது நிலவும் இல்லாததால் கல்லறை வளாகமே கும்மென்ற இருளில் மூழ்கியிருக்கும்

குடும்பத்தில் உள்ள அத்தனை உறவுகளும் ஒன்று சேர்ந்து இறந்த அவர்களின் சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்துவர். குங்குமம் மற்றும் மஞ்சள் கொண்டு கல்லறையை அலங்கரிப்பர்

அதேபோல் மாலைகள் மற்றும் பூக்கள் கொண்டும் கல்லறைகள் அலங்கரிக்கப்படும். குடும்பத்தினர் குத்துவிளக்கேற்றியும், மண் தீபம் ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர்

கல்லறை முன் தலை குனிந்து சிறப்பு பூஜைகளும் செய்கின்றனர். மேலும் இறந்தவர்களுக்கு இனிப்புகள் படைத்தும் கல்லறை முன் பட்டாசுகளை கொளுத்தி தங்கள் அன்புக்குரியவர்களுடன் தீபத்திருவிழாவை கொண்டாடுவர்

இவ்வாறு செய்வதால் இறந்தவர்கள் நம்முடனேயே இருப்பது போலவும் அவர்களுடன் தீபாவளி கொண்டாடியது போல மனதிற்கு நெருக்கமாக இருப்பதாக இந்த பகுதி மக்கள் கருத்து தெரிவித்தனர்

மேலும் தாங்கள் பாரம்பரியத்தை தவறாமல் ஒவ்வொரு ஆண்டும் பின்பற்றுவதாகவும் இப்படி செய்வதன் மூலம் இறந்த முன்னோர்கள் திருப்தி அடைந்து அவர்களின் ஆன்மா சாந்தியடைவதோடு தங்களை ஆசிர்வாதம் செய்வதாகவும் இந்த பகுதி மக்கள் நம்புகின்றனர்

எண்ணெயில் தீ பிடித்தால் என்ன செய்ய வேண்டும்.?