100-வது ஆண்டு லட்சதீப திருவிழாவிற்கு தயாராகும் ஆஞ்சநேயர் கோயில்.!

விழுப்புரம் திரு.வி.க. வீதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் லட்சதீப திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்

சென்ற ஆண்டு லட்சத்தீபம் ரத்தானதானத்தை அடுத்து இந்த ஆண்டு மிக விமர்சையாக விழுப்புரம் ஆஞ்சநேயர் கோயிலில் லட்சதீப திருவிழா நடைபெற உள்ளது

இந்த லட்ச தீப திருவிழாவில், பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து ஒரு லட்சம் தீபங்களை குளத்தில் ஏற்றுவார்கள். ஆகையினால் தான் இதற்கு லட்சத்தீபம் என்று பெயர்

வேண்டுதல் நிறைவேற வேண்டுமென்றும், வேண்டுதல் நிறைவேற்றியதற்கு நேர்த்திகடன் செலுத்துவதற்கும் தீபங்கள் ஏற்றப்பட்டு வழிபாடு செய்வார்கள் பக்தர்கள். இந்த விழா சுவாமி வீதியுலாவோடு துவங்கப்படும்

லட்சதீப விழாவை யொட்டி, விழுப்புரம் திரு.வி.க., வீதி ஆஞ்சநேய சுவாமி கோவிலில் உள்ள தெப்பக்குளம் சுத்தம் செய்யும் பணிகள் நேற்று நடந்தது

பல ஹோட்டல்களில் ஏன் 13 நம்பர் ரூம் இருப்பதில்லை தெரியுமா?

அதிக சம்பளம்... ஆனால் யாருக்கும் ஆர்வமில்லை... உலகளவில் யாரும் செய்ய விரும்பாத வேலைகள்!

கிராமமே ஐஏஎஸ் அதிகாரிகள்.. எங்கு இருக்கு தெரியுமா?

More Stories.

அது மட்டுமின்றி, லட்சதீப திருவிழாவை யொட்டி, திரு.வி.க., வீதியின் இருபுறங்களிலும் பல்வேறு கடைகள் போடுவது வழக்கமாகும். மேலும், சிறுவர்கள் விளையாடும் ராட்சத ராட்டினம், சிறிய ராட்டினங்கள் உள்பட பல்வேறு விளையாட்டு அரங்குகள் அமைக்கப்படுவது வழக்கம்