விழுப்புரத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்
இந்நிலையில் அதற்கு மாறாக தற்போது திடீரென காலையில் பனிபொழிவும் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்
மேலும், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு லேசான காற்று மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்தது
மேலும் விவசாயிகளுக்கு சம்பா பருவத்திற்கு தேவையான மழை பெய்து வருவதால், நடவு செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர்
இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பெய்த லேசான மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்