பாரம்பரிய அரிசி வகைகளை விற்பனை செய்யும் விழுப்புரம் இயற்கை விவசாயி.!

விழுப்புரம் மாவட்டம் அய்யூர் அகரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி பாலு என்பவர் 4 வருடங்களாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார்

தன்னுடைய வயல் நிலத்தில் பாரம்பரிய நெல் வகைகளான, கருப்பு கவுனி, சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருங்குருவை, தூயமல்லி, தங்க சம்பா, சிவன் சம்பா, தேங்காய் எண்ணெய் போன்ற பாரம்பரிய நெல்களை பயிர் செய்து விற்பனை செய்து வருகிறார்

அதுமட்டுமில்லாமல் தன்னைபோல் இயற்கை விவசாயம் செய்யும் பலரிடம் இருந்து குதிரைவாலி அரிசி, திணை, நாட்டுச்சக்கரை போன்றவற்றையும் வாங்கி வந்து விற்பனை செய்து வருகிறார். ரூ.50 முதல் 150 வரை என்ற விலையில் அனைத்து பாரம்பரிய பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது

மேலும் வீட்டிலேயே தயாரிக்கப்படும் சத்துமாவு பவுடர், கிச்சிலி சம்பா அரிசியில் தயாரிக்கப்படும் வத்தல் ஆகியன பொதுமக்கள் அதிகளவில் வாங்கி செல்கிறார்கள் என இயற்கையை விவசாயி பாலு கூறுகிறார்

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 1,500 ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது எனவும் பொதுமக்கள் சிலர் ஆதரவு அளிக்கின்றனர் என்று இயற்கை விவசாயி கூறினார்

மேலும், பொதுமக்கள் அனைவரும் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள் அரிசிகளை வாங்கி உண்டு உடல் நலத்தை காக்க வேண்டும் எனவும் விவசாயி பாலு அறிவுரை வழங்கினார்

நெல்லையில் பீடி சுற்றும் பெண்களின் இன்றைய நிலை இதுதான்.!