இந்துக்களின் முழுமுதற் கடவுளான விநாயகரை போற்றி ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விநாயகர் சதுர்த்தி பண்டிகை இந்துக்களின் முக்கிய பண்டிகை ஆகும்
இவ்விழாவிற்காக ஆண்டுதோறும் விழுப்புரம் அருகே அய்யங்கோவில்பட்டு, ராகவன்பேட்டை, சாலைஅகரம், கோலியனூர், பனையபுரம், அரசூர், சித்தலிங்கமடம்,
கரடிப்பாக்கம், திண்டிவனம் ஓங்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காகிதகூழ் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகளில் கைவினை தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்
இதனையடுத்து விழுப்புரம் அய்யங்கோவில்பட்டு உள்ள பெண்கள் அனைவரும் ஒரு மாதத்திற்கு முன்பு இருந்து களிமண்ணால் செய்யப்படும் அச்சு விநாயகர் சிலைகளை செய்து வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
பெரிய விநாயகருக்கு ஆண்களும் சிறிய விநாயகர்களுக்கு பெண்களும் என பிரித்துவேலை பார்த்து சிலைகளை தயாரித்து வருகின்றனர்
இன்னும் நான்கு நாட்களில் அனைத்து விநாயகர் சிலைகளுக்கும் வர்ணம் பூசப்பட்டு விற்பனைக்காக கடைவீதிகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்ய ஆரம்பித்து விடுவோம்என ஐயன் கோவில் பட்டு பெண்மணிகள் தெரிவித்தனர்