நவராத்திரி பண்டிகைக்கு விதவிதமான கொலு பொம்மைகள் தயாரிக்கும் கரடிப்பாக்கம் தொழிலாளர்கள்.!

விழுப்புரம் அருகே கரடிபாக்கம் பகுதியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, கொலு பொம்மை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கொலு பொம்மை தயாரிப்பு முறை பற்றியும், வகைகள் மற்றும் விலை போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள திரையை தட்டவும்...

உலகை ஆளும் சிவபெருமானை வழிபடும் நாள் சிவராத்திரி. ஆனால் அன்னை ஆதிபராசக்திக்கு வழிபாடு செய்ய 9 இரவுகள் உள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக வழிபாடுகள் செய்யப்படுகின்றன. அந்த அளவுக்கு நவராத்திரி சிறப்பு வாய்ந்தது என கூறப்படுகிறது

தமிழகத்தில் கொலு பொம்மைகள் வைத்து நவராத்திரி விழாவினை கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டு நவராத்திரி விழா வரும் 15ம் தேதி தொடங்கி அக்டோபர் 24ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது

கரடிபாக்கம் பகுதியில் நவராத்திரி கொலுவிற்கான பொம்மைகள் உற்பத்தி செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இங்கு காகிதக்கூழ் பயன்படுத்தி 30 வகையான கொலு பொம்மைகள் தயாரிக்கப்படுகிறது

இதில் ஐயப்பன், லட்சுமி நரசிம்மர், யோக நரசிம்மர், ஆண்டாள், ரங்கமன்னார், தட்சணாமூர்த்தி, ராமர் , மகிஷாசுரமர்த்தினி, கிருஷ்ணர், பைரவர் என பல்வேறு வகையான கொலு பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன

Stories

More

திருப்பதி போக முடியலையா கவலை வேண்டாம்..

கொடைக்கானலை ஃப்ரீயா சுற்றி பார்க்க சூப்பர் சான்ஸ்

குற்றாலம் ஐந்து அருவிக்கு பின்னால் இப்படி ஒரு கதையா..?

அரை அடி முதல் இரண்டரை அடி உயரம் வரை பொம்மைகள் தயார் செய்யப்படுகின்றன. சிலையின் உயரத்திற்கு ஏற்றார் போல் விலையும் நிர்ணயம் செய்யப்படுகிறது. குறைந்தபட்சம் 300ரூ முதல் 2,500ரூ வரை இங்கு தயாரிக்கப்படும் பொம்மையின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது

இங்கு தயாரிக்கப்படும் அனைத்து வகையான கொலு பொம்மையும் மயிலாப்பூர், சென்னை, பெங்களூரு போன்ற பல பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கொலு பொம்மை உற்பத்தி செய்வது குறித்த செய்முறை விளக்கத்தை பார்க்கலாம்

முதலில் கொலு பொம்மை செய்வதற்கான கலவை தயாரிக்கப்படுகிறது. பசை மாவு, கிழங்கு மாவு, மைதா மாவு, முகத்தில் பூசும் பவுடர், சிமெண்ட் பேப்பர் சேர்த்து கலவை தயாரிக்கப்பட்டு அந்த கலவையிலிருந்து பொம்மை செய்யப்படுகிறது

கோவையில் 1 ரூபாய்க்கு வளையல் வாங்கலாம் வாங்க.!