விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் அமைந்துள்ளது மாப்பிள்ளை விநாயகர் கோயில். இந்த மாப்பிள்ளை விநாயகர் கோவிலின் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்
அந்த வகையில் இந்தாண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரம்மாண்ட சோப கிருது கணபதி சிலை மற்றும் பைக்குகளில் அமர்ந்தபடி பேன்சி விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளன
மாப்பிள்ளை விநாயகர் கோயிலில் தயார் செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ராஜபாளையம் வடக்கு காவல் நிலையம் அருகே வைக்கப்பட்டுள்ளன
இளைஞர்களை கவரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான வேடங்களில் தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இங்கு வைக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் விநாயகர் ரேஸ் பைக் மற்றும் புல்லட் பைக்கில் அமர்ந்திருப்பது போன்ற சிலைகள், விநாயகர் விவசாயம் செய்தல்,
பளு தூக்கும் விநாயகர் போன்ற வித்தியாசமான பேன்சி விநாயகர்கள் சிலைகளும் இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழாவில் இடம் பிடித்துள்ளன