இயற்கையான முறையில் கலர் கலராக தயாராகும் விநாயகர் சிலைகள்.!

இந்துக்களின் முழுமுதற் கடவுளான விநாயகரை போற்றி ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் காகிதகூழ் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் கைவினை தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்

இங்கு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் விழுப்புரம் மட்டுமின்றி சென்னை, கோவை, கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை,

காஞ்சீபுரம், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது

ஆண்டு முழுவதும் இந்த விநாயகர் சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக அய்யங்கோவில்பட்டை சேர்ந்த கைவினை தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்

ஒரு அடி விநாயகர் முதல் 17 அடி விநாயகர் சிலை செய்யப்படுவதாகவும், 50 ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய்விலை வரை சிலை செய்யப்படுவதாக தெரிவித்தார்

சிலைகள் வாங்குவதற்கு பல்வேறு கோயில்களில் இருந்து ஆர்டர்கள் தருவார்கள் என்றும் கூறும் தொழிலாளர்கள், இந்த வருடம் சிவன் பார்வதி இருப்பது போன்ற பிள்ளையார், புத்தகம் எழுதுவது, குதிரையில் செல்வது போன்ற பல வடிவங்களில் பிள்ளையார் சிலை செய்யப்படுவதாக தெரிவித்தார்.

திருச்சியின் மலைக்கோட்டை தாயுமானவர் கோயிலின் சிறப்புகள் தெரியுமா.?