கைவினை பொருள்கள் விற்பனையில் உலகில் தனி இடத்தை பிடித்துள்ள கோவை பூம்புகார் விற்பனை நிலையத்தில் விநாயகர் சதூர்த்தி தினத்தை முன்னிட்டு விநாயகர் சிலை கண்காட்சி நடைபெறுகிறது
தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சி கழகம் மூலமாக நடத்தப்பட்டு வரும் இந்த பூம்பூகார் விற்பனை நிலையம் டவுன்ஹால் மணிக்கூண்டு அருகே அமைந்துள்ளது
ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் இங்கு பொம்மைகள், கடவுளின் உருவ சிலைகளை கொண்டு கண்காட்சிகள் நடைபெறுவது வழக்கம்
அந்த வகையில் விநாயகர் சதூத்தி தினம் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு இங்கு ’கணபதி தரிசனம்’ என்ற பெயரில் கண்காட்சி துவங்கி உள்ளது
பேப்பர் கூழ், களிமண், கருங்கல், கண்ணாடி, மரம், பஞ்சலோகம், வெண்கலம், பித்தளை கொண்டு வகை வகையாய், அழகழகாய் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன
கோவை மட்டுமல்லாது தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்த கைவினை கலைஞர்கள் தயாரித்த ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன
இங்கு 2 இன்ச் முதல் 6 அடி வரை உள்ள விநாயகர் சிலைகள் 75 ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது
இந்த கணபதி தரிசனம் கண்காட்சி வரும் 18ம் தேதி வரை நடைபெற உள்ளது. பண்டிகைக்கால சலுகையாக 10 சதவீதம் தள்ளுபடியும் கொடுக்குறாங்க கோவை மக்களே...