பாசிடிவ் எனர்ஜி கொடுக்கும் சாணத்திலான விதவிதமான குட்டி விநாயகர் சிலைகள்.!

நாடுமுழுவதும் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 7-ம் தேதி கொண்டாடப்பட உள்ளதால் 1 அடியில் இருந்து 15 அடி வரையிலும் விநாயகர் சிலைகள் செய்து கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றன

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகநாதன், வீட்டில் வளர்க்கும் மாடுகள் வைத்து கோசாலை அமைத்து பஞ்ச காவியங்கள் மூலம் 31 வகையான மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறார்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாட்டுச்சாணம், கோமயம் மற்றும் கஸ்தூரி மஞ்சள் கொண்டு 9,11, 12 ஆகிய அங்குலங்களில் மூன்று வகைகளில் தயார் செய்து வருகிறார். ரூ.150 முதல் ரூ.200 வரை விற்க்கப்படுகிறது

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் இயற்கைக்கு உகந்த வகையில் தயார் செய்வதால் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விற்பனைக்கு வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்

மாட்டு சாணத்தில் செய்வதை வீட்டில் வைப்பதால் பாசிடிவ் எனர்ஜி கொடுக்கும்

இதை விநாயகர் சதுர்த்தி முடிந்து கரைத்து விடலாம் அல்லது நிரந்தரமாக வீட்டில் வைத்தும் பூஜை செய்யலாம் என சண்முகநாதன் தெரிவித்தார்

next

சில்லென்ற கோவை உக்கடம் ஏரியில் ஆச்சரியப்படுத்தும் ஆர்ட் ஃப்ரம் வேஸ்ட் சிலைகள்.!