இந்தியாவில் கொண்டாடப்படும் மிகவும் முக்கியமான இந்துக்களின் பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் கொண்டாடப்படுகிறது விநாயகர் சதுர்த்தி
அந்த வகையில் இந்த வருடத்தின் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி தினத்தில் விநாயகரை எப்படி வணங்க வேண்டும் என்பதை இங்கே விரிவாக காணலாம்
விநாயகர் சதர்த்திக்கு முந்தைய நாளே வீட்டை நன்றாக சுத்தம் செய்து வீட்டை துய்மையாக வைத்து கொள்ளவேண்டும்
விநாயகர் சதுர்த்தி நன்னாளில் கடைகளில் வாங்கிய அல்லது களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை பூஜை அறைக்கு கொண்டு வர வேண்டும்
மதியம் 1 மணிக்குள் பூஜை செய்ய வேண்டும். ( காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை ராகு காலமும், மதியம் 1.30 மணி முதல் மதியம் 3 மணி வரை எமகண்டமும் வருவதால் அந்த நேரத்தில் வழிபடாமல் இருப்பது நல்லது)
பூஜை செய்வதற்கு ஏதுவாக விநாயகர் சிலைக்கு முன்பு வாழை இலையிட வேண்டும். வாழை இலையில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழத்தை வைக்க வேண்டும்
பின்னர், விநாயகருக்கு பிடித்த உணவுகளான கொழுக்கட்டை, சுண்டல், பால், தயிர், தேன், அவல், பொறி, லட்டு போன்றவற்றை வைக்க வேண்டும்
இவை அனைத்தும் வைக்க இயலாதவர்கள் கொழுக்கட்டை மற்றும் சுண்டல் வைத்தாலே போதும். பின்னர், விளாம்பழம், மாதுளை, வாழைப்பழம், கொய்யாப்பழம் ஆகியவற்றை வைக்க வேண்டும்
விநாயகருக்கு மிகவும் உகந்த மாலையாக கருதப்படும் எருக்கம்பூவால் ஆன மாலையை அணிவிக்க வேண்டும். விநாயகருக்கு உகந்த அருகம்புல்லை அவருக்கு சூட்டுவதும் சிறப்பானது ஆகும்
மாலை அணிவித்து, படையலிட்ட பின்பு தீபாராதனை காட்டி விநாயகரை வணங்க வேண்டும்
பின்னர், பிரசாதத்தை வீட்டில் உள்ளவர்கள் மட்டும் சாப்பிடாமல் அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு வழங்கி சாப்பிட்டால் விநாயகர் அருள் பரிபூரணமாக கிடைக்கும்
அடர்த்தியான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் 5 ஆரோக்கியமான பழங்கள்.!